கொல்கத்தா அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் அதிக ரன்கள் குவிக்கும் என்று நினைத்த தருவாயில் இருந்த ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படாததால் அந்த அணி தோல்வியைத் தழுவியது.
வழக்கம்போல் போட்டி முடிந்தவுடன் அந்த போட்டியில் யார் நன்றாக விளையாடாமல் இருந்தார்களோ அந்த வீரரை விமர்சகர்கள் ஏதாவது ஒன்று பேசிய விமர்சித்து விடுவார்கள்.
அப்படி தான் தற்போது இந்தியாவின் டெஸ்ட் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மீது ஆகாஷ் சோப்ரா கடுமையாக சாடியுள்ளார்.
ஏனெனில் சிறப்பாக ஆரம்பித்த சன் ரைசர்ஸ் அணியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த போட்டியின்மிடில் ஆர்டரில் இறங்கி மிகவும் பொறுமையாக விருத்திமான் சகா 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிலும் 34 பந்துகளில் பிடித்து 30 ரன்கள் எடுத்தார். அதன் காரணமாக இந்த அணியால் 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா : விருத்திமான் சஹா அவரால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. இதனால் அவர் ஓய்வு அறிவித்து விடலாம். பந்துவீச்சாளர்களுக்கு எல்லாம் ஒரு போட்டியில் நன்றாக விளையாடாவிட்டாலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.
ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு இந்த விதியை பொருந்துவதில்லை. பல போட்டிகளில் சொதப்பினாலும் மீண்டும் மீண்டும் விளையாடுகின்றனர் என்று கடுமையாக பேசியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. இவர் கூறியது ஓரளவு உண்மை என்றே கூறலாம். ஏனெனில் பெரிய வீரர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட அந்த வீரர்கள் அவர்களின் அந்த பெயருக்காகவே அதிகளவு வாய்ப்புகளை பெறுகின்றனர். ஆனால் வாய்ப்புக்காக அணியில் மற்ற இளம் வீரர்கள் இன்றளவும் காத்திருப்பது நிதர்சனமான உண்மையே.
35 வயது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான சஹா 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். மேலும் அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1238 ரன்களும், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 41 ரன்களும் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 121 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1795 ரன்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.