- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மா செய்யும் அந்த தவறுகள் தான் தோல்விக்கு காரணம் – ஆகாஷ் சோப்ரா சாடல்

இந்திய அணி சமீபகாலமாக சந்தித்து வரும் தோல்விகள் தற்போது அணி தேர்வின் மீது ஏகப்பட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக முதலில் மோசமான ஃபார்மில் இருந்த விராட் கோலி தற்போது மீண்டும் ரன்களை குவிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்ம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் வேளையில் அவரது இந்த மோசமான பார்ம் பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு தந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்த ரோகித் சர்மா அதன் பின்னர் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். இதுவரை 2022 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா விளையாடியுள்ள 18 போட்டியில் 434 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதில் இரண்டு அரை சதங்கள் மட்டுமே அவர் அடித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டுதான் அவரது கிரிக்கெட் கரியரில் மோசமான ஆண்டாக இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற தோல்விக்கு ரோகித் சர்மாவின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா கவனமாக இருக்காமல் தன்னுடைய விக்கெட்டை எளிதாக விட்டுக் கொடுக்கிறார். அவரது பேட்டிங் அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை. வழக்கமாக ரோகித் சர்மா 40 பந்துகளை சந்தித்தால் நிச்சயம் 70 முதல் 75 ரன்கள் வரை t20 போட்டிகளில் அடிப்பார்.

அந்த அளவுக்கு அதிரடியாக விளையாடும் அவர் தற்போது எல்லாம் எளிதாக ஆட்டம் இழந்து வருகிறார். அவரது பேட்டிங் ஸ்டைல் எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அதே நேரம் அணியின் வெற்றிக்கு கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். ஆனால் கேப்டன்சியிலும் ரோகித் சர்மாவில் அணுகுமுறை எனக்கு புரியவில்லை.

இதையும் படிங்க : அடுத்தடுத்த தோல்விகள். ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் குறித்து பேசிய சவுரவ் கங்குலி – என்ன சொன்னாரு தெரியுமா?

சமமான அணியை எடுக்காமல் முன்னுக்குப் பின் வெவ்வேறு வீரர்களை தேர்வு செய்து வருகிறார். சில நேரங்களில் சரியான வீரர்களை தவிர்த்து புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வருகிறார். இதுபோன்ற தவறான தேர்வுகளால் தான் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கிறது என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by