தோனி செய்தது தவறா ? என்ன முட்டாள் தனமா இருக்கு – பாக் வீரர்களை வெளுத்து வாங்கிய ஆகாஷ் சோப்ரா

- Advertisement -

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. ஆனால் லீக் சுற்றுகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து மட்டுமே லீக் சுற்றுகளில் இந்திய அணி பெற்ற ஒரே தோல்வியாக அமைந்தது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் அந்த தோல்வி குறித்து ஏற்கனவே சில சர்ச்சையான கருத்துக்கள் எழுந்தன. அதாவது இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை குறித்த எழுதிய தனது புத்தகத்தில் தோனி அந்த போட்டியில் இலக்கை விரட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றும் ரன் ரேட்டை உயர்த்த மட்டுமே நினைத்து ஆடினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் கோலி மற்றும் ரோஹித் ஆட்டமும் சிறப்பாக இல்லை அது மர்மமான விடயமாக அமைந்ததாகும் எழுதியிருந்தார். அதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்பதனாலேயே அதேபோன்று விளையாடினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Dhoni 1

இந்நிலையில் தற்போது அந்த நிகழ்வு குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக் இந்திய அணி குறித்து தவறான கருத்தினைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் அந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்தோம் எங்கள் அனைவருக்கும் அதே உணர்வுதான் ஏற்பட்டது. ஒரு நல்ல பந்து வீச்சாளர் அவரது நல்ல நிலைப்பாட்டில் பந்துகளை வீசவில்லை. ரன்களை வேண்டுமென்றே அதிகம் விட்டுக் கொடுத்தனர் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Razzaq

மேலும் எங்களுக்கு சந்தேகம் இல்லை பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்யவே இங்கிலாந்து அணியுடன் இந்தியா வேண்டும் என்று தோற்றது. எனவே இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் பாகிஸ்தான் அரையிறுதியில் விளையாடக் கூடாது என்ற காரணத்தினாலேயே இந்தியா இதேபோன்று செய்தது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே கருத்தினை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாக்கர் யூனிஸ்ஸும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த கருத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : இங்கிலாந்திடம் வேண்டும் என்றே இந்தியா தோற்றது என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா ? இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றது என்று அறிக்கையை விட்ட வக்கார் யூனிஸ் தூதுவராக இருப்பவர் இவ்வாறு செய்யலாமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

chopra

மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஜோடி சேர்ந்து ஆடியது பென் ஸ்டோக்ஸுக்கு நினைவில் இல்லையா ? அல்லது அவர் கடைசியில் தோனியின் அணுகுமுறையை குறித்து குழப்பம் அடைந்தாரா ? என்பது தெரியவில்லை. ஆனால் இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று அவர் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து இந்தியனே வேண்டுமென்றே தோற்றது என்று கூறிவருகின்றனர்.

ஐசிசி அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இந்திய அணிக்கு அந்த குரூப்பில் டாப் இடத்தை பிடிக்க வேண்டிய தேவை இருக்கும் போது வேண்டுமென்றே தோற்றது என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கடுமையாக சாடியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Advertisement