போட்டியை எப்படி வெற்றிகரமாக தோக்கணுன்னு இவங்கள பாத்து கத்துக்கோங்க – இந்திய முன்னாள் வீரர் கிண்டல்

kxip

இந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மிகவும் அபாரமான அணியாக இருக்கும் என்று தொடங்குவதற்கு முன்னர் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவிற்கு தான் முதல் சில போட்டிகளில் ஆடிய முதல் போட்டியில் சூப்பர் ஓவர் விதி முறையின் மூலம் கடுமையாக போராடி தோற்றது. அதன் பின்னர் பல போட்டிகளில் இப்படித்தான் போராடி போராடி தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது.

ipl

ஒரு சில போட்டிகளில் வெற்றிக்கு அருகில் இருந்தும் இறுதியில் சென்று கோட்டை விட்டு விட்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. கேஎல் ராகுல் கேப்டனாக இருக்க மயங்க் அகர்வால், ஷமி, பூரான், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி கும்ப்ளே பயிற்சியாளராக வந்ததால் பஞ்சாப் அணி சிறப்பாக செயல்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

கண்டிப்பாக இந்த வருடம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பஞ்சாப் அணிக்கு இந்தாண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஆனால், தொடர் தோல்விகளின் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட மோசமாக சென்று அதலபாதாளத்தில் இருக்கிறது பஞ்சாப் அணி இதுகுறித்து கிண்டலடித்து பேசியிருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா…

Kxip

பஞ்சாப் அணி தோல்வி அடைவதற்காகவே விளையாடுவதை போன்று தெரிகிறது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு மிகவும் அபாரமாக செயல்பட்டது பஞ்சாப் அணி. பேட்டிங் சரியாகத்தான் தொடங்கியது ஆனால் கடைசி நேரத்தில் கோட்டை விட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

- Advertisement -

mivskxip

இவர்களிடம் இருந்து தான் எப்படி தோற்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. அவரின் இந்த கருத்திற்கு பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது .