இவரை எதுக்கு தூக்கி போடாம தொடர்ந்து அணியில எடுக்குறீங்க ? – ஆகாஷ் சோப்ரா காட்டம்

Chopra
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKvsRR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.

buttler 1

இந்நிலையில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வரும் கேதர் ஜாதவ்க்கு எதிராக ரசிகர்களின் விமர்சனம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும் அவரது இடம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : காயம் காரணமாக விலகியுள்ள பிராவோவுக்கு பதிலாக எஞ்சியுள்ள போட்டிகளில் ஹெசில்வுடை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Jadhav-2

ஆனால் ஜாதவுக்கு அணியில் எதற்காக வாய்ப்பு கொடுக்கிறீர்கள் ? என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இன்னும் சரியான பேட்டிங் போசிஷன் அணியில் இல்லை என்று தெரிகிறது. அது மட்டுமின்றி அவர் பந்து வீசுவதும் கிடையாது. அவருக்கு பதிலாக வேறு ஒரு பந்து வீச்சாளரை அணியில் சேர்த்தாலாவது எதிரணிக்கு போட்டியை கொடுக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement