இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு டீம் சந்தித்த அவமானத்திற்கு இந்த ஒருவரே காரணம் – முன்னாள் வீரர் விளாசல்

SKY
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் மும்பை அணி அனைத்து அணிகளுக்கும் எதிராக தனது ஆதிக்கத்தை வலிமையாக வெளிப்படுத்தி ஐந்தாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்று அசத்தியது. இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட பலகணிகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தன.

Ishan kishan

- Advertisement -

முதல் ஆளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேற இந்த ஆண்டு அசத்தலாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் என்று நினைத்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் குவாலிபயர் சுற்றுக்கு முன்னர் எலிமினேட்டர் போட்டியில் தோற்று வெளியேறியது.

ஐபிஎல் தொடர் முடிவடைந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் ஐபிஎல் குறித்த சுவாரஸ்ய கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

finch 1

ஆஸி அணியின் இந்த வருட தோல்விக்கு முக்கிய காரணமாக தொடக்க வீரர் பின்ச்சின் சொதப்பலான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் இந்த சீசனில் பின்ச் ஆர்சிபி அணிக்கு மிகப் பெரிய தொகையில் ஏலம் போனார். மேலும் அதிரடி ஆட்டக்காரரான அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆர்சிபி அணிக்கு பெரும் ஏமாற்றத்தைத் தரும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பெரும்பாலும் அனைத்துப் போட்டிகளிலும் படிகல்லுடன் இணைந்து விளையாடி ரன்களை குவிக்க தவறினார். அதனால் மீண்டும் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் மீது அழுத்தம் ஏற்பட்டது. அவர் மட்டும் சரியாக விளையாடி இருந்தால் டிவில்லியர்ஸ் மற்றும் கோலிக்கும் அழுத்தம் இருக்காது எனவும் பெங்களூர் அணி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும் எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement