இந்த வருட சி.எஸ்.கே அணியை தேர்வு செய்து வெளியிட்ட சோப்ரா – 3 ஆவது இடத்தில் யார் இறங்குவது தெரியுமா ?

csk

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை ஐ.பி.எல் தொடரில் வெற்றிகரமான அணியாக இருந்து வருகிறது. தான் ஆடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அனி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். 8 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ள சென்னை அணி 3 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. இது அனைத்திற்கும் காரணம் அந்த அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனி தான் இந்த வருடமும் அவர் கேப்டனாக இருக்க போகிறார்.

இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார். முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா
இந்த அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு ஆகியோர் களம் இறங்குவார்கள். சுரேஷ் ரெய்னா இந்த வருடம் களம் இறங்க மாட்டார் அதற்கு பதிலாக டுப்லஸ்ஸிஸ் அந்த இடத்தில் ஆடினால் சரியாக இருக்கும்.

நான்காவது இடத்தில் தோனி அல்லது ஜாதவ் ஆகிய இருவரில் ஒருவர் தான் சரியாக இருக்கும். அதேநேரத்தில் நான்காவது இடத்தில் தோனி இறங்கினால் 5 ஆவது இடத்தில் கேதர் ஜாதவ் இறங்கலாம். ஒருவரை ஒருவர் இதில் சரியாக தங்களை இறக்கிக் கொள்ள வேண்டும்

Duplesis

ஆறாவது இடத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும், ஏழாவது இடத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ எட்டாமிடத்தில், சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் இறங்கினால் பேட்டிங் ஆர்டர் வலுப்படும் என்று கூறியுள்ளார். அதற்கடுத்து சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அதன்பின்னர் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாகர் ஆகியோர் களம் இறங்கினால் அணி மிகவும் கன கச்சிதமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

- Advertisement -

Tahir

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த சி.எஸ்.கே அணி இதோ : 1) ஷேன் வாட்சன், 2) அம்பத்தி ராயுடு, 3) டூப்லெஸிஸ், 4) கேதர் ஜாதவ், 5) மகேந்திர சிங் தோனி, 6) ரவிந்திர ஜடேஜா, 7) பிராவோ, 8) மிட்செல் சான்ட்னர், 9) இம்ரான், 10) தாஹிர், 11) தீபக் சஹர்