- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனிமேல் முகமது ஷமி டி20 இந்திய அணிக்கு திரும்ப வாய்பில்லை.. காரணத்தை கூறிய – ஆகாஷ் சோப்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து விளையாட முடியாமல் தவித்து வருகிறார். குறிப்பாக 2023 உலக கோப்பை தொடரில் கணுக்கால் காயத்துடன் விளையாடியிருந்த அவர் அதன்பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு எவ்வித சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இந்திய டி20 அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பில்லை : ஆகாஷ் சோப்ரா

பின்னர் பெரிய இடைவெளிக்கு பிறகு ஒரு வழியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் கம்பேக் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் காயத்தால் அவதிப்பட்ட அவர் கடந்த பல மாதங்களாகவே இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தார். ஆனாலும் அண்மையில் தனது காயத்திலிருந்து மீண்ட அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்திருந்தார்.

- Advertisement -

இருந்தாலும் இதுவரை முழு உடற்தகுதி இல்லாத காரணத்தினால் மீண்டும் முதன்மை அணியில் இணையாமல் இருக்கிறார். தற்போது உள்ளூர் தொடர்களில் முகமது ஷமி தொடர்ச்சியாக விளையாடி வரும் வேளையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெற மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

அதுமட்டும் இன்றி அவர் இனி டி20 இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க வாய்ப்பே இல்லை என்றும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்திய டி20 அணியானது தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. எனவே இனிவரும் டி20 போட்டிகளில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை இணைக்க மட்டுமே நிர்வாகம் ஆர்வம் காட்டும். இதனால் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீண்டும் டி20 அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை.

- Advertisement -

தற்போதைய இந்திய டி20 அணியில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா என இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் அவர்களுடன் அனுபவ வீரராக பும்ரா மட்டுமே இணைய வாய்ப்புள்ளது. அதனால் முகமது ஷமி இனி டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஒருவேளை சுப்மன் கில் டி20 அணிக்குள் வந்தால்.. அக்சர் படேலின் பதவிக்கு தான் ஆபத்து – விவரம் இதோ

மேலும் இனி இந்திய அணிக்காக முகமது ஷமி விளையாட வேண்டுமெனில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் இடம் கிடைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -