இனிமே ரஹானே விளையாட வாய்ப்பில்லை. பி.சி.சி.ஐ போட்டுள்ள ஸ்கெட்ச் – முன்னாள் வீரர் கருத்து

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது டிசம்பர் 26 ஆம் தேதி “பாக்ஸிங் டே” போட்டியாக செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தொடரின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித்துக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரை அவர் தவற விட்டதால் கே.எல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Rahul-1

- Advertisement -

இதன் காரணமாக தற்போது முன்னாள் துணை கேப்டன் ரஹானே தனது டெஸ்ட் துணைக்கேப்டன் பதவியை தவற விட்டுள்ளார். அதோடு அவர் இந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவது சந்தேகம் என்றும் அவருக்கு இனி இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : கே.எல் ராகுல் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது நிர்வாகத்தின் முடிவு. ராகுலின் இந்த பதவி நியமனத்துக்கு காரணமே ரஹானேவை ஓரம் காட்டுவதற்காகத்தான் என்று தெரிகிறது. இதன் காரணமாக ரகானே இனி பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கஷ்டம் தான் என்று எனக்கு தோன்றுகிறது.

Rahane

மேலும் கடந்த இரு போட்டிகளுக்கு முன்னர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அவருக்கு தற்போது துணை கேப்டன் பதவி கூட மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமே அவரை இந்திய அணியின் இருந்து ஓரம் கட்டுவதற்கு தான் என்பது தெளிவாகி உள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். நியூசிலாந்து தொடரின் போது கிடைத்த வாய்ப்பை தவற விட்ட அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் 16 போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவரோட பவுலிங்கில் யாராவது அடிங்கப்பா ப்ளீஸ். பிளாட் பிட்சிலும் சூப்பரா போடுறாரு – கெவின் பீட்டர்சன் கருத்து

கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அவருடைய சராசரி 25-க்கும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் அவர் இந்த தென் ஆப்ரிக்க தொடரில் விளையாடாத பட்சத்தில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் வாய்ப்பினை பெறுவது கடினம்தான் என்றும் இந்திய அணியை விட்டே வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement