போட்டியை வெற்றிகரமாக முடிக்க அதிக பினிஷர்களை கொண்ட அணி இதுதான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

CskvsMi

ஐபிஎல் அணி என்பது மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் அற்புதமான ஆல்ரவுண்டர்கள், ஒரு சரியான கேப்டன், சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்தால் போதும் வெற்றி பெற்றுவிடலாம். குறிப்பாக அதிரடியாக ஆடும் வீரர்கள் கண்டிப்பாக வேண்டும். கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் அடிக்கும் அளவிற்கு திறமை உள்ள வீரர்கள் எப்போதும் அணியில் இருக்க வேண்டும். குறிப்பாக கடைசி ஓவர் வரை போராடிய இழுத்துச் சென்று வெற்றிபெறும் வீரர்களுக்கு தான் ஐபிஎல் தொடரில் மதிப்பு.

Dhoni 1

இந்த பணியை தோனி மிகச்சிறப்பாக கடந்த பல வருடங்களாக செய்து இருப்பதை பார்த்திருப்போம். இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எந்த அணியில் மிகச்சிறந்த அதிரடி பினிஷர்கள் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

என்னைப் பொறுத்தவரை அதிக பினிஷர்கள் இருக்கும் அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். இந்த அணியை தான் நான் முதல் இடத்தில் வைப்பேன். அந்த அணியில் தான் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரரான பொல்லார்ட் இருக்கிறார். சமீபத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் 28 பந்துகளில் 72 ரன்கள் விளாசி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

Pollard

இதுபோன்று அவரால் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க முடியும். அவரால் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆட முடியும். அதனையும் தாண்டி இரண்டாவதாக நான் கொல்கத்தா அணியை வைப்பேன் ஏனெனில் அந்த அணியில் தான் ஆன்ரூ ரஸல் இருக்கிறார். இவரும் அப்படித்தான் பல முறை வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

Russell

என்ற இரண்டு அணிகளை தான் மிகச்சிறந்த பினிஷர்கள் உள்ள அணி என்று கூறுவேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆகாஷ் சோப்ரா கடந்த பல வருடங்களாக எப்படி ஒரு போட்டியை முடித்து வெற்றி பெறுவது என்று உலகிற்கு கற்றுக்கொடுத்த தோனியை மறந்து விட்டார் போலிருக்கிறது ஆகாஷ் சோப்ரா.