கோலிக்கு அடுத்து இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக இருக்க இவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

வரும் சனிக்கிழமை துவங்க உள்ள இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசுவார்கள் ? எந்த பேட்ஸ்மேன்களை அதிக ரன்களை குவிப்பார் ?எந்த அணி வெற்றி பெறும் ? போன்ற பல்வேறு கருத்துக்களை அவர்கள் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக செயல்பட இருக்கும் இளம் வீரர் ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் ராகுல் சிறப்பான கேப்டனாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்.

Rahul

மேலும் அவர் கேப்டனாக பணியாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்திய அணியில் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது ஒரே வயதுடைய வீரர்களாக விளையாடி வருகின்றனர். அதனால் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிக்க வாய்ப்பு இருக்கும் இதன் காரணமாக அடுத்த இந்திய அணியின் கேப்டனாக ராகுல் மாறுவதற்கு இந்த ஐபிஎல் தொடர் ஒரு பெரிய அடித்தளமாக அமையும்.

- Advertisement -

Rahul

இந்த தொடரில் அவர் தனது கேப்டன்சியை நிரூபிக்கும் பட்சத்தில் கோலிக்கு அடுத்து நீண்டகால கேப்டனாக ராகுல் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளார். மேலும் இளம் வீரரான ராகுல் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு கேப்டனாக செயல்பட நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.