இந்த வருட ஐ.பி.எல் தொடரில் கோலியை விட இளம்வீரரான இவரின் பேட்டிங் அசத்தலாக இருக்கும் – ஆகாஷ் சோப்ரா பேட்டி

Chopra
- Advertisement -

கடந்த 12 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத சில அணிகள் இருக்கின்றன. அப்படி ஒருமுறை கூட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றாத ராசியில்லாத அணிகளாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆகிய அணிகள் உள்ளன. இதில் டெல்லி கேப்பிடல் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளுக்கும் வருடாவருடம் மிகச் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Rcb

- Advertisement -

ஆனால் என்னதான் பெங்களூரு அணி சிறப்பான வீரர்களை தேர்வு செய்தாலும் அந்த அணி அனைத்து தொடர்களிலும் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த பல வருடங்களாக ஒரு கோப்பை கூட வெல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் இந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் பயிற்சியாளராக அணில் கும்ப்ளே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

முதன்முறை கேப்டனாக கேஎல் ராகுல் களமிறங்கப் போகிறார். மேலும் அவர் தான் துவக்க வீரராக விக்கெட் கீப்பர் ஆகவும் செயல்படப் போகிறார். அவரது ஆட்டத்தை காண கம்பீர் ஆவலுடன் காத்திருப்பதாக கூறியிருந்தார். அதேபோன்று இந்த முறை விராட் கோலியை விட கேஎல் ராகுல் தான் அதிகரன்கள் குவிப்பார் என்று தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா..

kohli

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி எப்போதும் போல அதிகரன்கள் குவிப்பார் என்பதை நாம் அறிவோம். இதை வருடா வருடம் செய்து வருகிறார். ஆனால் இந்த முறை விராட் கோலியை மிஞ்சும் அளவிற்கு கேஎல் ராகுல் ஆடப் போகிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் நிச்சயம் விராட் கோலியை விட கேஎல் ராகுல் அதிகரன்கள் அடிப்பார்.

Rahul 1

கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருப்பதால் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. ஏற்கனவே இந்திய அணியின் டெஸ்ட் வடிவத்திலிருந்து நீக்கப்பட்ட ராகுல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார். அதுமட்டுமின்றி எந்த இடத்தில் பேட்டிங் இறங்கினாலும் அதற்கு ஏற்றாற்போல் கச்சிதமாக பொருந்தி அவர் அதிரடியாக ஆடிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement