2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா செல்வதை ஆஸியால் தடுக்க முடியாது.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash Chopra
- Advertisement -

ஐசிசி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் செல்வதற்கான போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலைமையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் முறையே 68.52, 62.50, 50, 45.83, 42.86 சதவீத புள்ளிகளுடன் டாப் 5 இடங்களில் இருக்கின்றன. அதில் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 2025 ஜூன் 11ஆம் தேதி லண்டனில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போராட உள்ளன.

இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. அதில் சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேசம் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் இந்தியா வெல்லும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்:

அதனால் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஓரிரு போட்டிகளை வென்றாலே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தொடர்ந்து 3வது முறையாக தகுதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா மிகவும் வேகமாக தொடர்ந்து 3வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை நோக்கி செல்கிறது”

“சொல்லப்போனால் தற்சமயத்தில் நாம் டேபிள் டாப்பராக சென்று கொண்டிருக்கிறோம். இந்தியாவுக்கு இன்னும் 10 போட்டிகள் எஞ்சியுள்ளது. அந்த 10 போட்டிகளிலும் வென்றால் 85% புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பிடிக்கும். அதே சமயம் ஆஸ்திரேலியாவில் நாம் ஓரிரு டெஸ்ட் போட்டிகளை வென்றால் கூட நாம் ஃபைனல் வாய்ப்பை பெறுவோம்”

- Advertisement -

இந்தியா தகுதி பெறுமா:

“ஏனெனில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நாம் நன்றாக செயல்படுவோம் என்று எதிர்பார்க்கிறோம். அந்தத் தொடர்களில் நாம் வெற்றிகளை தவறவிடவில்லை என்றால் கண்டிப்பாக ஃபைனல் செல்வோம். இந்தியாவைத் தொடர்ந்து நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா வலுவான அணியாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் 2 தொடர்கள் உள்ளது. ஒன்று இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள்”

இதையும் படிங்க: இந்தியா பெரிய டீமா இருக்கலாம்.. ஆனா இதை செய்றவங்க தான் ஜெய்ப்பாங்க.. 150 கி.மீ வங்கதேச பவுலர் பேட்டி

“மற்றொன்று இலங்கை மண்ணில் நடைபெறும் தொடராகும். ஒருவேளை இந்தியாவை அவர்கள் 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்தால் ஃபைனலுக்கு தகுதி பெறுவார்கள். ஒருவேளை தங்களுடைய அடுத்த 7 போட்டிகளையும் வென்றால் அவர்கள் 76.30% புள்ளிகளுடன் தகுதி பெறுவார்கள். அதைத் தொடர்ந்து இலங்கை, இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு ஃபைனல் கொஞ்சம் குறைவான வாய்ப்புகளே இருக்கிறது. தற்போதைய நிலையில் வங்கதேசம், இங்கிலாந்து அணிகள் ஃபைனலுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக தெரிகிறது” என்று கூறினார்.

Advertisement