என்னை கொன்னாலும் பரவாயில்லை. ஜெயிக்கப்போவது அவங்கதான் – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 364 ரன்களை குவித்தது. அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 391 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 27 ரன்களுடன் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தது.

red cap 2

- Advertisement -

அதன் பின்னர் தற்போது தங்களது 2வது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 181 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறும் வேளையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தான் வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருடைய யூடியூப் சேனலில் பேசிய அவர் : லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தான் வெற்றி பெறும். இதனை சொல்வதற்காக என்னை ரசிகர்கள் கொன்றாலும் பரவாயில்லை. எனக்கு இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

கடைசி நாளான இன்று ஆடுகளத்தில் மாறுதல் இருக்கும். பந்துவீச்சில் பவுன்ஸ் இருக்காது, ஆடுகளம் மந்தமாக உள்ளதால் 6 விக்கெட்களை இழந்து பின்பு இந்திய அணி இந்த நிலைமையை சமாளிப்பது கடினம். அப்படியே நிலைமையை சரி செய்தாலும் இன்றைய போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் மீதமுள்ள அனைத்து விக்கெட்டையும் இழந்து விடுவார்கள்.

ஒருவேளை 190 முதல் 200 ரன்கள் வரை அடித்து விட்டால் இந்திய பவுலர்களால் இங்கிலாந்து அணியை ஓரளவு சமாளிக்க முடியும், இருந்தாலும் அது முடியாத காரியம் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement