ஐ.பி.எல் தொடரை வைத்துதான் தோனிக்கு இடம் என்பது இல்லை. தோனியை வெளியே அனுப்ப இதுதான் ஒரே வழி – ஆகாஷ் சோப்ரா பேட்டி

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் இந்திய அணி இதுவரை விளையாடவில்லை. சில மாதங்கள் தற்காலிக ஓய்வில் இருந்த தோனி அதன்பின்னர் பல தொடர்களாக அணியில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

Dhoni

- Advertisement -

மேலும் அவர் இந்திய அணியில் விளையாடி 8 மாத காலம் ஆகிவிட்டதால் இந்திய அணி வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் அவர் பெயர் நீக்கப்பட்டது. இதனால் மீண்டும் இந்திய அணியில் தோனி இடம் பிடிப்பது கடினம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போதைய இந்திய அணி தேர்வை பார்க்கும்போது தோனியை கடந்து இந்திய அணி நிர்வாகம் சென்றுவிட்டது என்றே தோன்றுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர்களில் எவ்வாறு விளையாடுகிறார் அதைப் பொறுத்தே இந்திய உலகக்கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த கருத்தை தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா முற்றிலும் மறுத்துள்ளார்.

Dhoni 1

இது குறித்து அவர் பேசும்போது : தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை வைத்துதான் அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்பது இல்லை. அது ஒரு தவறான கணிப்பு ஒருவேளை அவர் அணியில் இணைவது என்றால் அவர் எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர் என்பதும், அவர் இந்திய அணிக்காக என்னென்ன சாதித்துள்ளார் என்பதையும் பற்றி அனைவருக்கும் தெரியும்.

- Advertisement -

அதன் அடிப்படையில் அவரை தேர்வு செய்வார்களே தவிர தோனியை ஒருபோதும் ஐபிஎல் சோதனை மூலம் தேர்வு செய்ய மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் இது குறித்து விரிவாகப் பேசிய சோப்ரா : தோனி இந்திய அணிக்கு தேவை என அணி நிர்வாகம் நினைத்தால் அதே சமயம் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை தோனியிடம் இருந்தால் அது நிச்சயம் நடக்கும்.

Dhoni

ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடிய பின்னர் தான் அணியில் இணைவார் என்பதெல்லாம் ஒரு பொருட்டில்லை. என்னுடைய கணிப்பு படி டி20 தொடர் ஒரு ஆண்டு தள்ளிப் போகும் என்றால் தோனிக்கு மேலும் ஒரு வயது கூடும். மேலும் அப்படி பார்த்தால் அவர் விளையாடி 18 மாத காலம் ஆகும் என்பதால் அதன் அடிப்படையிலேயே அவர் அணியில் தேர்வு செய்யப்படாமல் போகலாம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement