மும்பை அணியின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போடணும்னா அது இந்த அணியால் தான் முடியும் – ஆகாஷ் சோப்ரா

Chopra

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தற்போது 13 சீசன் களை கடந்து 14வது சீசனுக்கு வந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. உலகில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் ரசிகர்களிடையே இந்தத்தொடர் குறித்த எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

ipl

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் ? எந்த வீரர் நன்றாக விளையாடுவார் ? எந்த பவுலர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இந்த முறை நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி பாதையை இந்த ஒரு அணியால் தான் தடுக்க முடியும் என தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது உள்ள அணி பலத்தின்படி மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் அதே நேரத்தில் அவர்களின் வெற்றிப்பாதைக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் முடியும் என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில் : டெல்லி அணி மிகப் பலம் வாய்ந்த அணி என்பது நாம் கடந்த தொடரில் பார்த்திருப்போம். அனைத்து துறைகளிலும் வீரர்கள் பொருத்தமாக உள்ளனர். இம்முறை ரிஷப் பண்டின் தலைமையில் டெல்லி அணி பலமாக திகழும்.

- Advertisement -

nortje 1

அதற்கு காரணம் இந்திய அணியின் வீரர்களான தவான், ரஹானே, பிரித்திவி ஷா, அஸ்வின், மிஸ்ரா இஷாந்த் சர்மா ஆகிய சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் உமேஷ் யாதவ், அக்ஷர் பட்டேல்,இஷாந்த் ஷர்மா, ரபாடா, நார்ட்ஜே க்றிஸ் வோக்ஸ், ஸ்டாய்னிஸ் என பலரும் உள்ளனர். எனவே இம்முறை டெல்லி அணி நிச்சயம் மும்பை அணிக்கு கடுமையான போட்டி அளிக்கும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.