அடுத்த ஐ.பி.எல் தொடருக்காக மெகா ஏலம் வந்தா தோனியை விட்டுடுங்க – சரியான காரணத்தை கூறிய ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடர் பல்வேறு இன்னல்களுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார். மேலும் அதற்கான வேலைகளிலும் அவர் இப்போது இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியை சேர்க்கவும், அதுமட்டுமின்றி மெகா ஏலத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

அதன்படி மெகா ஏலம் நடைபெறும் அப்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை பெயரை ஏலத்தின் பட்டியலில் விட வேண்டும் என்றும் தோனியை அணியில் ரீடெய்ன் செய்யாமல் ஏலத்திற்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு சர்ச்சையான கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் சரியான விளக்கத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : மெகா ஏலம் நடைபெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ஏலத்தில் பங்கேற்க வைக்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் அவரை நீங்கள் அணியில் ஒருமுறை ரீடெய்ன் செய்தால் மூன்று ஆண்டுகள் வரை அணியில் தக்கவைக்க வேண்டும் இதுதான் விதி. ஆனால் தோனி தற்போது இருக்கும் நிலைமையில் 3 ஆண்டுகள் வரை கிரிக்கெட்டில் விளையாடுவாரா ? என்பது சந்தேகம் தான். அதையும் யோசித்துப் பார்க்கவேண்டும். அதுமட்டுமின்றி தோனியை ஏலத்தில் அனுப்பி குறைந்த தொகையில் சி எஸ் கே அணி திரும்பப் பெற்றால் மீதம் இருக்கும் தொகைக்கு மற்ற திறமையான பல வீரர்களை அணிக்குள் கொண்டு வர முடியும்.

Dhoni

தற்போது தோனி 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவருக்கு அதே சம்பளத்தை கொடுத்தாக வேண்டும். ஒருவேளை இடையில் அவர் ஓய்வு பெற்றாலும் மீதி இரண்டு ஆண்டுகளுக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள வீரரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும் எனவே அவரை அணியில் ரீடெய்ன் செய்யாமல் ஏலத்திற்கு அனுப்பி பிறகு ரைட் டு மேட்ச் கார்டை பயன்படுத்தி திரும்ப பெறலாம் என்பதே சரியான முடிவாக இருக்கும் என்றும் சோப்ரா கூறியுள்ளார்.

dhoni 1

அவரது இந்த கருத்து பலரும் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது. ஏனெனில் தோனியின் வயது மற்றும் அவருடைய விலையைக் கணக்கில் கொண்டு அவரை ஏலத்திற்கு அனுப்பி திரும்பப்பெறும் போது சிறிது தொகை குறையும் அதுமட்டுமின்றி மேலும் சில புதிய வீரர்கள் சென்னை அணிக்கு கிடைப்பார்கள் என்பதால் ரசிகர்கள் இந்த கருத்தை வரவேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement