- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித், கோலியும் இல்ல.. இது கிடைச்சும் இங்கிலாந்தில் 30 ஆவேரேஜில் முடிக்காதீங்க.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த இளம் அணியில் கேஎல் ராகுல் மட்டுமே சீனியர் பேட்ஸ்மேனாக தேர்வாகியுள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றக் காரணத்தால் இம்முறை ராகுல் இங்கிலாந்து மண்ணில் பொறுப்புடன் விளையாடி பெரிய ரன்கள் குவிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ராகுல் நல்ல துவக்கத்தைப் பெறுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

ஓப்பனிங் நல்லாருக்கு:

ஆனால் அடுத்தடுத்தப் போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடும் ராகுல் தொடரை ஃபினிஷிங் செய்யத் தவறுவது இந்தியாவுக்கு தோல்விகளைக் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இங்கிலாந்து மண்ணில் ராகுல் சிறப்பாக ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ராகுல் பற்றி நினைக்கும் போது நல்ல துவக்கத்தைப் பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாமல் விளையாடுவதே எனக்கு நினைவுக்கு வரும்”

“ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் அவர் நன்றாக துவங்கினாலும் கடைசியில் சரிந்து விடுகிறார். முதல் போட்டியில் 80, 2வது போட்டியில் 100 ரன்களை அடிக்கும் நீங்கள் கடைசியில் 30.00 என்ற பேட்டிங் சராசரியுடன் தொடரை ஃபினிஷிங் செய்யாமல் இருப்பதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். என்னைக் கேட்டால் ராகுல் 47, 48, 52, 54 என்ற சராசரியுடன் தொடரை முடிப்பதை விரும்புவேன்”

- Advertisement -

பொறுப்புடன் ஃபினிஷிங் செய்ங்க:

“அதை செய்வதற்கு இதை விட சிறந்த நேரம் இருக்காது. ஏனெனில் இங்கிலாந்துக்கு நீங்கள் புதியவர் கிடையாது. இம்முறை இந்திய அணியில் ரோஹித், விராட் கோலியும் இல்லை. அதனால் இம்முறை ராகுலுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. கடைசியாக அவர் இங்கிலாந்து மண்ணில் முழுமையாக விளையாடினார். எனவே ராகுல் நீங்கள் இம்முறை கொஞ்சம் பொறுப்புடன் விளையாடுங்கள்” என்று கூறினார்”

இதையும் படிங்க: இதுக்கு காரணமான யுவ்ராஜ் சிங்கிற்கு நன்றி.. ஹைதராபாத் கம்பேக் கொடுக்கும்.. அபிஷேக் சர்மா அப்பா பேட்டி

அவர் கூறுவது போல கடந்த ஆஸ்திரேலிய தொடரில் கூட ராகுல் முதல் போட்டியிலேயே 80க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் ராகுல் பெரிய ரன்கள் எடுக்காதது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமானது. எனவே இம்முறை அவர் இங்கிலாந்து மண்ணில் பொறுப்புடன் விளையாடுவது அவசியமாகிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -