இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நாளை மறுதினம் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் வீரர்களிடையே ஏற்பட்டுள்ள தொடர் காயம் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல : ஆகாஷ் சோப்ரா
ஏனெனில் ஏற்கனவே ஜஸ்ப்ரீத் பும்ரா பணிச்சுமை காரணமாக நான்காவது போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயமடைந்ததை தொடர்ந்து மேலும் ஒரு வீரராக ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டியும் நான்காவது போட்டிக்கு முன்னதாக காயமடைந்து இந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதன் காரணமாக ஏகப்பட்ட மாற்றங்கள் நான்காவது போட்டியின் போது நிகழ வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இருவர் காயமடைந்ததன் காரணமாக அவர்களுக்கு மாற்று வீரராக அன்ஷுல் கம்போஜ் இந்திய அணிக்குள் இணைக்கப்பட்டார். இப்படி அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் இணந்தது தான் தற்போது பெரியளவில் கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரின் ஆரம்பத்தில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டு பின்னர் இந்திய வீரர்களில் யாரும் காயமடைய மாட்டார்கள் என்று கூறப்பட்டு அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டிருந்தார். ஆனால் தொடரின் பிற்பாதியில் தற்போது புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் :
இந்திய அணியிடம் தற்போது ஒரு தெளிவு இல்லை என்று நான் கூறுவேன். ஏனெனில் இந்த தொடரின் ஆரம்பத்தில் ஹர்சித் ராணா கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியுடன் பயணித்தார். ஆனால் தொடரின் பாதியிலேயே அவர் வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர் தற்போது இந்த தொடரின் பிற்பாதியில் இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி அன்ஷுல் கம்போஜ் அணியில் இணைந்துள்ளார்.
இப்படி தொடரின் பிற்பாதியில் புதிய வீரரை திடீரென இணைத்தது தவறு. ஏனெனில் இந்திய அணியில் ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் என்றால் ஹர்ஷித் ராணா தான் உங்களுடைய அடுத்த தேர்வாக இருந்திருக்கு வேண்டும். அவரைத்தான் மீண்டும் நீங்கள் இந்திய அணியில் மாற்றுவீரராக அழைத்திருக்க வேண்டும். ஆனால் அவரை தவிர்த்து தற்போது அன்ஷுல் கம்போஜ்ஜை சேர்த்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இதையும் படிங்க : 3 ஆம் இடத்தில் யார் விளையாடனும்? கருண் நாயர், சாய் சுதர்சன் இருவரில் யார் பெஸ்ட்? – சஞ்சய் மஞ்சரேக்கர் பதில்
அதுமட்டுமின்றி இந்திய அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவு எனக்கு தெளிவு இல்லை என்றே தெரிகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி இரண்டு ஒன்று (2-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ள வேளையில் அடுத்த போட்டியில் இந்திய அணி எவ்வாறு வீரர்களை களமிறக்கும் என்ற கேள்வியும் இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



