இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்த தொடரில் ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணியானது நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்யும்.
ஆகாஷ் சோப்ரா தேர்வுசெய்துள்ள இந்திய அணி :
இதன் காரணமாக நாளைய இந்த நான்காவது போட்டி அனைவரது மத்தியிலும் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமைய வேண்டும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் இந்திய வீரர்களும் தங்களது கணிப்புகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த தனது விருப்பத்தினை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் துவக்க வீரர்களாக சந்தேகத்திற்கு இடமின்றி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் தான் என்னுடைய முதல் தேர்வு.
அவர்கள் இருவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் கருண் நாயருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து விளையாட வைப்பேன். நான்காவது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் வழக்கம் போல விளையாடுவார். அதேபோன்று கடந்த போட்டியில் காயமடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்த போட்டியில் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவார்.
ஆறாவது இடத்தில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேலுக்கு நான் இடம் வழங்கியுள்ளேன். அதேபோன்று ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடம் கொடுக்கலாம். அவர்களை தவிர்த்து வேகப்பந்து வீச்சு கூட்டணியில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் தொடர்வார்கள்.
இறுதியாக எஞ்சியுள்ள ஒரு வேகப்பந்து வீச்சாளர்களான இடத்தில் ஆகாஷ் தீப் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து திரும்பினால் அவரை விளையாட வைக்கலாம் அல்லது அவருக்கு காயம் குணமடையவில்லை எனில் அந்த இடத்தில் பிரசித் கிருஷ்ணா தான் விளையாட வேண்டும். இதுவே எனது தேர்வு என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : 3 மாற்றங்களுடன் 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த இர்பான் பதான் – லிஸ்ட் இதோ
1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) கருண் நாயர், 4) சுப்மன் கில், 5) ரிஷப் பண்ட், 6) துருவ் ஜுரேல், 7) ரவீந்திர ஜடேஜா, 8) வாஷிங்டன் சுந்தர், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) முகமது சிராஜ், 11) ஆகாஷ் தீப்/பிரசித் கிருஷ்ணா.



