3 மாற்றங்களுடன் 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த இர்பான் பதான் – லிஸ்ட் இதோ

Irfan Pathan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இர்பான் பதான் தேர்வுசெய்து வெளியிட்ட இந்திய அணி :

ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள முதல் மூன்று ஆட்டங்களில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளை பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் பல்வேறு வீரர்கள் காயமடைந்துள்ள காரணத்தால் அவர்களுக்கு பதிலாக சில மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த தங்களது கணிப்புகளை முன்னாள் வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தற்போது அவரது பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த பிளேயிங் லெவனில் மூன்றாவது போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில் மூன்று பேரை வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவித்திருக்கிறார். அந்த வகையில் நிதீஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் அணிக்குள் வந்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று கடந்த போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீப் காயமடைந்து வெளியேறியுள்ளதால் மீண்டும் பிரசித் கிருஷ்ணாவுக்கு இடம் கொடுத்துள்ளார். மேலும் மூன்றாவது இடத்தில் கருண் நாயரை நீக்கிவிட்டு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அந்த வகையில் இர்பான் பதான் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : கருண் நாயர் என்ன தப்பு செஞ்சாரு? ராகுல், கில் மாதிரி இந்திய அணி அவசரப்படக்கூடாது.. ஹர்பஜன் ஆதரவு

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன், 4) சுப்மன் கில், 5) ரிஷப் பண்ட், 6) துருவ் ஜுரேல், 7) ரவீந்திர ஜடேஜா, 8) வாஷிங்டன் சுந்தர், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) முகமது சிராஜ், 11) பிரசித் கிருஷ்ணா

Advertisement