- Advertisement -
ஐ.பி.எல்

2026 ஐ.பி.எல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு இந்த வீரர் தான் ஏலம் போவார் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆர்.சி.பி அணி சிஎஸ்கே, மும்பை அணிக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் கோப்பையை வெல்லாது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அந்த குறை இந்த ஆண்டு தீர்ந்தது.

மினி ஏலத்தில் இவர்தான் அதிக தொகைக்கு போவார் : ஆகாஷ் சோப்ரா

அதனை தொடர்ந்து எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் நடைபெற இருக்கும் மாற்றங்கள் குறித்தும் அதிகளவில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

- Advertisement -

அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மினி ஏலமானதும் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்கள் மற்றும் புதிதாக ஏலத்திற்கு வரும் வீரர்கள் என பல்வேறு வீரர்கள் பங்கேற்பார்கள். இந்த மினி ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த 2026 மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய வீரராக எந்த வீரர் இருப்பார்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் பல்வேறு சுவாரஸ்யமான தேர்வுகள் நடைபெறும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகும் வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இன்னும் அவர் பந்துவீச்சுக்கு முழுமையாக தயாராகவில்லை.

இதையும் படிங்க : எதிர்வரும் டி20 உலககோப்பையில் இதை செய்யனும்.. அதுவே எனது ஆசை – கிளென் மேக்ஸ்வெல் பேட்டி

இருப்பினும் நிச்சயம் வெகுவிரைவில் அவர் பந்து வீசவும் துவங்குவார். இதன் காரணமாக ஆல்ரவுண்டரான அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டும் என்று ஆகாஷ் சோப்ரா பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -