ஐ.பி.எல் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த பிளேயிங் லெவன் அணி இதுதான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra

ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வந்த பல வீரர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதுவரை இத் தொடரில் 29 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் அடிப்படையில் தன்னுடைய ப்ளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா. அவருடைய இந்த அணியில் இந்தியாவின் முன்னனி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா என எவரும் இடம்பெறவில்லை. இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அந்த வீடியோவில்

14வது ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீர்ர்களின் அடிப்படையில் என்னுடைய சிறந்த ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அவருடைய அணியில், இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஷிகர் தவான் மற்றும் மூன்றாமிடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியின் கேப்டனான கே எல் ராகுல் ஆகிய இருவரையும் துவக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்திருக்கிறார். சென்னை அணிக்காக ஓப்பனிங்கில் இறங்கி, இந்த தொடரில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து அசத்தியிருக்கும் டுயூப்ளசிஸுக்கு ஒன்டவன் ஆர்டரை வழங்கியுள்ளார். நான்காவது இடத்தை, கடந்த பல ஐபிஎல் தொடர்களில் ஒன்றுமே செய்யாமல், இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அற்புதமாக ஆடிய கிளென் மேக்வெல்லை கொண்டு நிரப்பியிருக்கிறார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து வரும் மிக முக்கியமான ஐந்தாவது இடத்தையும், மற்றொரு பெங்களூர் அணி வீரரான ஏபி டி வில்லியர்சுக்கு வழங்கியிருக்கிறார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி காட்டியதே இந்த இடத்தை அவருக்கு வழங்க காரணமென்றும் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். ஆறாவது இடத்தில் ஒரு இடது கை வீரர் இருந்தால் நன்றாக இருக்குமென்று தான் நினைப்பதாக கூறிய அவர், ஆறாவது இடத்தை ரிஷப் பன்ட்டிற்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த தொடரின் அதி அற்புதமான பர்ஃபாமன்ஸ் என்று சொன்னால், அது ரவீந்திர ஜடேஜா பெங்களூர் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்ததாகத்தான் இருக்கும். இப்படி இந்த தொடரில் அற்புதுமாக செயல்பட்டிருக்கும் ரவீந்திர ஜடேவிற்கு தனது அணியில் ஏழாவது இடத்தை அளித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. எட்டாவது இடத்தை ராஜஸ்தான் அணியின் கிறிஸ் மோரிஸ் பிடித்திருக்கிறார். மேலும் 9,10,11 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் இந்திய அணியின் சிறந்த வேகப் பந்து வீச்சாளரான பும்ரா இடம்பெறுவார் என்று எதிர்பார்ந்திருந்த நிலையில், அந்த இடங்களை ராகுல் சஹார், ஹர்ஷல் பட்டேல், அவேஷ் கான் என்ற திறமையான இளம் வீர்ர்களுக்கு வழங்கியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

- Advertisement -

Harshal

ஆகாஷ் சோப்ராவின கிரிக்கெட் அணி:

01. ஷிகர் தவான் 02. கே எல் ராகுல் 03. டூயூப்ளசிஸ் 04. மேக்ஸ்வெல் 05. ஏபி டி வில்லியர்ஸ் 06. ரிஷப் பன்ட் 07. ரவீந்திர ஜடேஜா 08. கிறிஸ் மோரிஸ் 09. ராகுல் சஹார் 10. அவேஷ் கான் 11. ஹர்ஷல் பட்டேல்

Advertisement