இந்த வருட 8 ஐ.பி.எல் அணிகளில் உள்ள 8 சிறந்த வீரர்கள் இவர்கள்தான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

ipl 1

ஐபிஎல் தொடர் இந்தியாவில் 13 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏகப்பட்ட சிக்கல் இருந்தாலும் எப்படியாவது நடத்தி பார்த்து விடுவேன் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் சௌரவ் கங்குலி. இந்தத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக தான் இருக்கப்போகிறது. ஐபிஎல் தொடரிலும் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், விக்கெட் கீப்பர்கள் என பலரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்களது அணிகளுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

ipl

ஒரு சில அணிகளில் இந்த அனைத்து வேலைகளையும் செய்யக் கூடியவர்களும் இருப்பார்கள். இந்த வீரர்கள் தான் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் மதிப்புமிக்க வீரர்களாக கருதப்படுவார்கள் அவர்களுக்கு பரிசு தொகை மற்றும் விலையுயர்ந்த பரிசுகள்கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த பல வருடங்களாக ஹர்திக் பாண்டியா, ஆண்ட்ரே ரசல், டிவைன் பிராவோ, பொல்லார்ட் ஆகிய பல வீரர்கள் இந்த மதிப்புமிக்க வீரர்களில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இந்த வருடம் ஒவ்வொரு அணியிலும் யார் மதிப்புமிக்க வீரராக இருப்பார் என்பது குறித்து பேசியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

JADEJA

அதன்படி அவர் வெளியிட்டுள்ள மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலில் : மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா, சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, பெங்களூர் அணியில் விராட் கோலி ஆகிய வீரர்களை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

Russell

ஹைதராபாத்தில் ரஷித் கான், கொல்கத்தா அணியில் ஆன்ட்ரே ரசல், டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ராஜஸ்தான் அணிகள் ஜோஸ் பட்லர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கே எல் ராகுல் ஆகியோர் தங்களது அணியில் மிகச்சிறந்த மதிப்புமிக்க வீரர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.