வெறும் 3 வீரர்களை மட்டும் வைத்து சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா – அணிவீரர்களின் விவரம் இதோ

Chopra
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக இருந்து வருகிறார். இவர் தற்போது தற்காலத்தின் மிகச்சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். பலரும் தங்களது அணிகளை வித்தியாசமாக வெளியிடும் வேலையில் இவர் அதை விட வித்தியாசமாக ஒரு அணியை வெளியிட்டுள்ளார்.

Agarwal-2

- Advertisement -

இந்த அணியின் தொடக்க வீரர்களாக நியூசிலாந்து வீரர் டாம் லேதம் மற்றும் இந்திய இளம் வீரர் மயங்க் அகர்வாலை தேர்வு செய்துள்ளார். இதில் மயங்க் அகர்வால் எப்படி இடம் பிடித்தார் என்று தெரியவில்லை. அவர் முழுமையாக இன்னும் 20 டெஸ்ட் போட்டிகளில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்திற்கு ஸ்டீவன் ஸ்மித் நான்காவது இடத்திற்கு விராட் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கேப்டனாக விராட் கோலியை நியமித்துள்ளார் அவர். ஐந்தாவது இடத்திற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இருக்கிறார். இவர் கடந்த இரண்டு வருடமாக ஃபார்மில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Stokes

ஆல்ரவுண்டர் ஆக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது ஒரு நல்ல தேர்வு. விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்காவின் குவின்டன் டி காக் இருக்கிறார். இது அருமை. வேகப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இடம்பெறுகிறார். மேலும் அவரே இந்த அணியின் துணைக்கேப்டனாக தேர்வு செய்யப்ட்டுள்ளார்.

- Advertisement -

இடது கை வேகப்பந்து வீச்சாளராக நியூசிலாந்தில் நீல் வாக்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக நேதன் லையன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Lyon

ஆகாஷ் சோப்ராவின் சமகால சிறந்த டெஸ்ட் லெவன்:

டாம் லேதம், மாயங்க் அகர்வால், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி(கேப்டன்), ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், நீல் வாக்னர், பும்ரா, நேதன் லயன்.

Advertisement