பெங்களூரு அணியில் இந்த 4 பேரை சேருங்கள். அப்போது தான் டீம் வெயிட்டா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Dubai

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் முறை கோப்பையை கைப்பற்ற டெல்லி அணி, பஞ்சாப் அணி மற்றும் பெங்களூரு அணி ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது. இதுவரை நடந்த அனைத்து தொடர்களிலும் சிறப்பான வீரர்களை வைத்து இருந்தும் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை.

அதனால் இம்முறை பெங்களூரு அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் பெங்களூர் அணியில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்களை எடுத்தால் அந்த அணி வெற்றிபெறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் ஆடும் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்களை இந்த காம்பினேஷனில் இறக்கினால் வலுவானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

rcb 2

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் : ஆரோன் பின்ச் துவக்க வீரராக இறக்கலாம் அதேபோன்று டிவில்லியர்ஸ் கண்டிப்பாக அணியில் இருப்பார். அதை தவிர்த்து மொயின் அலி மற்றும் கிரிஸ் மோரிஸ் ஆகியோரை ஆடவைக்கலாம். அவர்கள் இருவரும் சிறப்பான ஆல்ரவுண்டர் என்பதால் இந்த நான்கு பேருடைய கலவை அணியில் சரியாக இருக்கும் எனவே இந்த காம்பினேஷனில் இறக்கினால் நிச்சயம் பெங்களூர் அணிக்கு அது வெற்றியை தேடித்தரும்.

Finch

அதுமட்டுமின்றி தற்போது பாஸ்ட் பவுலிங்கை பொருத்தமட்டில் உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் என போதுமான அளவிற்கு இந்திய வீரர்கள் சிறப்பாக உள்ளதால் வெளிநாட்டு பாஸ்ட் பவுலரை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement