- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் ஆஸி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் இது தான்.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய அணி களமிறங்க உள்ளது. அவருடைய தலைமையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் விளையாட உள்ளதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே தரமான வீரர்களான அவர்களுடைய ஆட்டத்தைப் பார்க்க ஆஸ்திரேலிய ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான தனது உத்தேச இந்திய அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

இந்திய லெவன் அணி:

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேட்டதற்கு ஓப்பனிங்கில் கேப்டன் சுப்மன் கில், ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 3வது இடத்தில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். 4வது இடத்தில் புதிய துணைக் கேப்டனாக தேர்வாகியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்றும் அவர் கணித்துள்ளார்.

5வது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுலை தேர்ந்தெடுத்துள்ள ஆகாஷ் சோப்ரா ஆல் ரவுண்டராக நித்திஷ் ரெட்டியை தேர்ந்தெடுத்துள்ளார். ஹர்திக் பாண்டியா காயத்தை சந்தித்து வெளியேறியுள்ளதால் நித்திஷ் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஸ்பின் ஆல் ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பிடிக்கிறார்கள்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா தேர்வு:

வேகப்பந்து வீச்சுத் துறையில் விமர்சனங்களை தாண்டி கௌதம் கம்பீர் ஆதரவுடன் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார். அவருடன் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரையும் ஆகாஷ் சோப்ரா தம்முடைய இந்திய அணியில் தேர்ந்தெடுத்துள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமை காரணமாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விளையாடவில்லை.

இதையும் படிங்க: முதல் ஆஸி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் இது தான்.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான ஆகாஷ் சோப்ரா இந்திய பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கீப்பர்), நித்திஷ் ரெட்டி, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

- Advertisement -