இந்த 11 பேர் மட்டும் கொல்கத்தா அணிக்காக இந்த வருஷம் அவங்களுக்கு தான் கப் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகிற ஏப்ரல் ஒன்பதாம் தேதி தொடங்கப்பட்டு மே 30ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. 2012ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டு என இரு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அதன் பின்னர் தற்போது வரை கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

kkr

- Advertisement -

இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இந்த 11 வீரர்கள் இருந்தால் போதும் நிச்சயம் நன்றாக விளையாடடும் என்றும் இவர்கள் சரியாக விளையாடினால் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு அதிக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கூறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் :

ராகுல் திரிபாதி, சுப்மன் கில், நிதிஷ் ராணா, இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரியூ ரசல், பேட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா, லோகி பெர்குஷான்/ சுனில் நரைன்/ ஷாகிப் அல் ஹசன், குல்தீப் யாதவ்.

- Advertisement -

Kkr

வீரர்களை பட்டியலிட்ட ஆகாஷ் சோப்ரா தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்துள்ளார். அதற்கடுத்தபடியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக நித்திஷ் ஆனா தினேஷ் கார்த்திக் மற்றும் இயன் மோர்கனை தேர்ந்தெடுத்துள்ளார். ஆல்ரவுண்டர் வீரர்களாக பேட் கம்மின்ஸ் மற்றும் ஆண்டரூ ரசலை தேர்ந்தெடுத்துள்ள ஆகாஷ் சோப்ரா பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் பிரசித் கிருஷ்ணா, வருன் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார்.

Kkr

11ஆவது வீரராக மற்றும் நான்காவது வெளிநாட்டு வீரராக லோகி பெர்குசன் அல்லது ஷகிப் அல் ஹசன் அல்லது சுனில் நரைனை ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடும் பட்சத்தில் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Advertisement