ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஐ.பி.எல் பெஸ்ட் லெவன் அணி. ரசல்லே சப்ஸ்டியூட் தானாம் – அணி வீரர்களின் லிஸ்ட் இதோ

Chopra
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த 12 வருடமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு நடைபெற இருந்த 13 ஆவது ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது சந்தேகம் தான். இந்த 12 வருடத்தில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்களும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டு வீரர்களும் அற்புதமாக ஆடி தங்களுக்கென்று பெயரை சேர்த்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு நிரந்தர ஐபிஎல் அணி இருந்தால் அது எப்படி இருக்கும் என்று ஒரு அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இந்த அணியில் ஏழு இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து மூன்று வீரர்களுக்கு இடம் கொடுத்துள்ளார்.

தொடக்க வீரர்களாக இடது கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், வலதுகை பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா ஆகியோரும். மூன்றாவது இடத்திற்கு விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வழக்கமாக சுரேஷ் ரெய்னா தான் மூன்றாவது இடத்தில் ஆடி அதிக ரன்கள் குவித்துள்ளார். ஆனால் அவரை நான்காவது இடத்தில் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா .

Dhoni

5வது இடத்தில் அதிரடி வீரரான ஏபி டிவிலியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக தோனியை கண்ணை மூடிக்கொண்டு நியமித்திருக்கிறார். ஏனெனில் இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றும், மூன்று முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இதுவரை ஆடிய அனைத்து ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சுழற் வீச்சாளர்களாக தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கொல்கத்தா வீரரான சுனில் நரைனும் இடம்பிடித்துள்ளார்.

Russell

வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் மலிங்கா ஆகியோர் இருக்கின்றனர் 12 மற்றும் 13 வீரர்களாக கௌதம் கம்பீர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ரசெல் ஆகியோர் இருக்கின்றனர். அவரின் இந்த தேர்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement