ஐ.பி.எல் 2021 : ஆகாஷ் சோப்ரா கணித்துள்ள பெங்களூரு அணியின் சிறந்த பிளேயிங் லெவன் – அணி இதோ

Chopra

14வது ஐபிஎல் லீக் தொடர் நாளை மறுநாள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கப்பட்டு மே 30ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் உடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட தொடரை கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த முறை நிச்சயம் தொடரை கைப்பற்றி கோப்பையை வெல்லும் முனைப்புடன் பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறது.

rcb

இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் இந்த 11 வீரர்கள் ஆர்சிபி வீரர்கள் அணியில் விளையாடினால் நிச்சயம் அவர்களுக்கு கை கொடுக்கும் என்று கணித்துள்ளார்.
அதன்படி ஆகாஷ் சோப்ரா கணித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் 11 ஆட்டக்காரர்கள் :

படிக்கல், விராட் கோலி, ராஜட் பட்டிடர், ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், சஹால், முகமது சிராஜ், மற்றும் நவதீப் சைனி.

rcb

தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல்லை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். மூன்றாவது இடத்தில் மத்தியபிரதேசம் அணிக்காக விளையாடி வரும் ராஜட் பட்டிடரை தேர்வு செய்துள்ளார். பட்டிடர் 23 டி20 போட்டியில் விளையாடி 699 ரன்கள் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டி பொறுத்தவரையில் அவரது அவரேஜ் 35 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 143.5 ஆகும்.

- Advertisement -

rcb 2

நான்காவது இடத்தில் வழக்கம்போல ஏபி டிவில்லியர்ஸ் அவரைத் தொடர்ந்து 5வது இடத்தில் மேக்ஸ்வெலை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர் வீரர்களாக டேனியல் கிறிஸ்டின் மற்றும் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்துள்ளார். பவுலர்களைப் பொறுத்தவரையில் நியூசிலாந்தை சேர்ந்த ஜேமிசன், முகமது சிராஜ், நவ்தீப் சைனி மற்றும் சஹாலை தேர்வு செய்துள்ளார்.இந்தப் 11 வீரர்கள் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பொருத்தமான வீரர்களாக இருப்பார்கள் என்று கூறிய ஆகாஷ் சோப்ரா, இவர்கள் சரியாக விளையாடும் பட்சத்தில் ஆர்சிபி அணி நிச்சயம் தொடரில் வெற்றிகளை குவிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.