ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த சிறந்த டெல்லி ஐ.பி.எல் அணி – வீரர்களின் விவரம் இதோ

Chopra

இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரராக இருந்த ஆகாஷ் சோப்ரா தனது மிகச்சிறந்த ஐபிஎல் டெல்லி அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக பல முன்னாள் வீரர்கள் இதே வேலையை செய்து வருகின்றனர். தற்போது ஆகாஷ் சோப்ராவின் அணியில் கேப்டனாக தோனி இல்லை என்பது மட்டுமே வித்தியாசம்.

sehwag

அவருக்கு பதில் முன்னாள் இந்திய வீரர் சேர்த்துள்ளார். மேலும் தோனியை அவர் சேர்க்கவில்லை என்பது மேலும் ஒரு விஷயம். இவரது அணியில் துவக்க வீரராக விரேந்தர் சேவாக் தேர்வு செய்துள்ளார். மேலும் அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளார். மற்றொரு துவக்க வீரர் கவுதம் கம்பீர் இடம்பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்திற்கு பலரும் விராட் கோலியை தேர்வு செய்து நிலையில் இவர் மட்டும் ஏபி டிவில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார் நான்காவது இடத்திற்கு ரெய்னாதான் சரியாக இருப்பார் என்று பல விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர் ஸ்ரேயஸ் ஐயரை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக தோனியை கண்டுகொள்ளவே இல்லை. இவை அனைத்தும் டெல்லி அணி வீரர்களை கொண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வு இப்படி அமைந்துள்ளது.

iyer

அவருக்கு பதில் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டராக ஜேபி டுமினி, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இருக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா மற்றும் சபாஷ் நதிம் ஆகியோர் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் டிர்க் நானஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

இவரது தேர்வு சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிரபலமான வீரர்கள் அனைவரையும் ஓரம்கட்டிவிட்டு இரண்டாவது லைனில் இருக்கும் வீரர்களை பெரும்பாலும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Rishabh pant

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த சிறந்த டெல்லி அணி இதோ : வீரேந்திர சேவாக்(கேப்டன்), கவுதம் கம்பீர், டிவில்லியர்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்)ஜேபி டுமினி, கிறிஸ் மோரிஸ், அமித் மிஷ்ரா, ஷபாஸ் நதீம், ஆஷிஸ் நெஹ்ரா, டிர்க் நான்ஸ்