ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த டி20 பெஸ்ட் லெவன் அணி. ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் தேர்வு – வீரர்களின் பட்டியல் இதோ

- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும், விளையாட்டுப் போட்டியும் நடைபெற வில்லை. இதன் காரணமாக ரசிகர்களும் வீரர்களும் தங்களுக்குள்ளேயே சமூகவலைதளத்தில் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் ஐசிசி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்தது.

chopra

- Advertisement -

அந்த பதிவில் உலகின் சிறந்த டி20 அணியை தேர்வு செய்யலாம், தேர்வு செய்து இங்கே பதிவிடுங்கள் என்று அனைவரையும் அழைத்து இருந்தது. இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது அணியை தேர்வு செய்து வெளியிட்டார். குறிப்பாக தேர்வு செய்யும்போது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீரர் தான் இருக்க வேண்டும், ஒரே நாட்டில் அதிக வீரர்களை எடுக்கக் கூடாது என்றும் பதிவு செய்தது.

இதனால் குழப்பமடைந்த ஆகாஷ் சோப்ரா இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோரை வைத்து விட்டு ஒரே ஒரு பந்து வீச்சாளரை மட்டும் தேர்வு செய்துள்ளார். துவக்க வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் இங்கிலாந்தில் ஜாஸ் பட்லர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

jos butler

அடுத்ததாக காலின் முன்ரோ அதற்கு அடுத்து பாபர் அசாம் அதற்கு அடுத்து ஏபி டிவிலியர்ஸ் அதற்கடுத்து ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மற்றும் ஆன்ட்ரு ரஸல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித் கான் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த சந்தீப் லாமசின்னே ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளறாக ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்துள்ளார். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரே ஒரு வீரரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பதால் விராட் கோலியுடன் ரோகித் சர்மாவை விட்டுவிட்டு இந்திய பந்துவீச்சாளர் பும்ராவை தேர்வு செய்துள்ளார் அவர். மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவை தேர்வு செய்துள்ளார்.

Bumrah

ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட 11 பேர் கொண்ட டி20 அணி இதோ : 1) வார்னர் 2) ஜாஸ் பட்லர் 3) காலின் முன்ரோ 4) பாபர் அசாம் 5) டிவில்லியர்ஸ் 6) சாகிப் அல் ஹசன் 7) ஆண்ட்ரு ரசல் 8) ரஷீத் கான் 9) சந்தீப் லாமசின்னே 10) பும்ரா 11) மலிங்கா

Advertisement