ஸ்டார்க், பும்ரா, மலிங்கா மூவரில் யார் பெஸ்ட் ? சூப்பர் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் இவர்தான் – முன்னாள் இந்திய வீரர் தேர்வு

Bowler
- Advertisement -

சூப்பர் ஓவர் விதிமுறைகள் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கடந்த பல வருடங்களாக ஏற்படுத்தி வருகிறது. 2007ம் ஆண்டு இந்த முறை பவுல் அவுட் என இருந்தது. அதன் பின்னர் சூப்பர் ஓவர் ஆக மாற்றப்பட்டது.அப்போதிலிருந்தே தற்போது வரை எப்போதெல்லாம் சூப்பர் ஓவர் நடக்கிறதோ அப்போதெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சை வந்துவிடும்.

newzeland
newzeland

இப்படித்தான் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி டிராவில் முடிந்தபோது இவ்விடயம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சூப்பர் ஓவர்களை அற்புதமாக வீசும் பந்துவீச்சாளர்களும் இருக்கின்றனர். தற்போது உள்ள கிரிக்கெட் காலத்தில் பந்துவீச்சாளர்களுக்கு இருந்தாலும் அதில் சில பவுலர்கள் மட்டும் சூப்பர் ஓவரை சிறப்பாக வீசும் திறன் படைத்திருக்கின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து விவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை அணியின் லசித் மலிங்கா, ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் போன்ற பந்துவீச்சாளர்கள் சூப்பரோ ஓவரிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

Bowler

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, மிட்செல் ஸ்டார்க், ரஷீத் கான் ஆகிய பந்துவீச்சாளர்களில் சூப்பர் ஓவர் வீசுவதற்கு யார் சரியான பந்துவீச்சாளர் என்பது குறித்து பேசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அவர் கூறுகையில்…

- Advertisement -

சுனில் நரேன் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் இந்த வேலைக்கு சரியான ஆட்கள் அவர்களது வரிசையில் வேகப்பந்து வீச்சாளர்கள் லசித் மலிங்கா மற்றும் ஸ்டார்க் ஆகியோர் வரிசையில் வருவார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் பொறுத்தவரை சூப்பர் ஓவரை வீச ஜஸ்பிரித் பும்ரா தான் எனது முதல் தேர்வு .அதனைத்தொடர்ந்து மலிங்கா அதற்கு அடுத்து மிட்செல் ஸ்டார்க் தரமான யார்க்கர் பந்துகளை வீச கூடியவர்கள் என்று தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Bumrah

பும்ரா சூப்பர் ஓவரை வீசும்போது யார்க்கர் பந்தினை சிறப்பாக வீசுவார். அதுமட்டுமின்றி ஸ்லோ பால்களையும் கூடவே ஸ்லோ பவுன்சர்களையும் வீசுவதில் அவர் வல்லவர் என்பதால் பும்ராவை தனது முதல் தேர்வாக ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்ததாக கூறியுள்ளார்.

Advertisement