எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடரில் இந்த 2 அணிகளும் மோசமான பாதிப்பை சந்திக்கும் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கிரிக்கெட் வர்ணனையாளராக மாறிய பின்னர் கிரிக்கெட் குறித்த பல விடயங்களை சமூக வலைதளம் மூலமாக கருத்துக்களாக தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஐபிஎல் தொடர் குறித்தும் அவ்வப்போது அவர் சமூக வலைதளம் மூலமாக தனது கருத்தினை பகிர்ந்து வருகிறார். இந்தியாவில் துவங்கிய 14 ஆவது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டதால் மீண்டு மீதமுள்ள போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

IPL

இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளையும் செப்டம்பர், அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிசிசிஐ நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவினை உறுதிப்படுத்திய பி.சி.சி. திட்டமிட்டபடி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில அணிகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த தொடரில் இடம் பெறமாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

அதன்படி பங்களாதேஷ் அணியை சேர்ந்த சாகிப் அல் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்றும் வெஸ்ட்இண்டீஸ் வீரர்களும் இந்த தொடரில் இணைவது தாமதமாகியுள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படி வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் போனால் எந்த எந்த அணிகள் பாதிக்கப்படும் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Morgan

இந்த ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் முதலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பங்களாதேஷ் அணியை சேர்ந்த வீரர்களும் விளையாட மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. இப்படி பார்க்கையில் இரண்டு அணிகளுக்கு இந்த தொடர் மோசமாக அமைய வாய்ப்புள்ளது. ஒன்று கொல்கத்தா அணி ஏனெனில் கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ், மோர்கன் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோர் விளையாட மாட்டார்கள்.

RRvsSRH

அதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது ஏனெனில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயம் காரணமாக சிலரும், கொரோனா அச்சம் காரணமாக சிலரும் அணியில் இருந்து விலகிய வேலையில் தற்போது அந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் இன்றி விளையாட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெளிநாட்டு வீரர்கள் இன்றி இந்த தொடரில் பெரிய சிக்கலை சந்திக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement