- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாவம் தப்பே செய்யாத அவரை ட்ராப் பண்ணிட்டாங்க.. வெற்றி ஜோடியை பிரிச்சுடீங்க.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அப்போதிலிருந்தே அவர் இந்திய அணியில் பல அதிரடியான மாற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதும் ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாண்டியாவுக்கு துணை கேப்டன்ஷிப் பதவியை கூட கொடுக்காத கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமாரையும் துணை கேப்டனாக சுப்மன் கில்லையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதே போல இலங்கை டி20 தொடரில் அபிஷேக் சர்மா, ருதுராஜ் ஆகியோரை கழற்றி விட்ட கம்பீர் தனது கடைசி போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சனையும் ஒருநாள் தொடரில் கழற்றி விட்டார். அத்துடன் ரவீந்திர ஜடேஜாவை ஒருநாள் கிரிக்கெட்டில் கழற்றி விட்ட அவர் யுஸ்வேந்திர சஹாலையும் தேர்ந்தெடுக்கவில்லை. குறிப்பாக 2017 – 2019 காலகட்டத்தில் குல்தீப் யாதவ் – சஹால் ஆகிய ஸ்பின்னர்கள் ஜோடி சேர்ந்து எதிரணிகளை திணறடித்தனர்.

- Advertisement -

பாவமான சஹால்:
அதனால் குல்ச்சா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அந்த ஜோடியில் சஹாலுக்கு சமீப காலங்களில் வாய்ப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவருக்கு அடுத்ததாக நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் காரணமின்றி இந்திய அணியில் சஹால் கழற்றி விடப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் சஹாலை வைத்து விளையாடுங்கள் என்றே சொல்வேன். அவரிடம் பிரச்சனை என்ன? 2023 உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பாக அவர் கழற்றி விடப்பட்டார். அதற்கு முன்பு வரை விளையாடிய அவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நீக்கப்பட்டார். அதே போல டி20 உலகக் கோப்பையில் தேர்வான அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை”

- Advertisement -

“ஆனால் உலகக்கோப்பை முடிந்ததும் மீண்டும் அவர் நீக்கப்பட்டுள்ளார். உண்மையில் இந்த பாவமான பையன் தவறாக எதுவும் செய்யவில்லை. என்னுடைய பார்வையில் அவரிடம் திறன் இருக்கிறது. இலங்கை ஒருநாள் தொடரில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்கும் திறமை தேவைப்பட்டதை நாம் பார்த்தோம். கொழும்பு மைதானத்தில் எதிரணி நல்ல துவக்கம் பெற்றாலும் உங்களால் 3 – 5 விக்கெட்டுகளை எடுக்க முடியும்”

இதையும் படிங்க: இப்படியே போனா கம்பீருக்கும், ரோஹித்துக்கும் சண்டை வர வாய்ப்பிருக்கு.. என்ன நடக்குது இந்திய அணியில்? – விவரம் இதோ

“அது போன்ற சூழ்நிலைகளில் குல்தீப் யாதவ் – சஹால் ஆகியோர் விரல் ஸ்பின்னர்களை விட கொஞ்சம் அதிகமான திறனை கொண்டிருக்கிறார்கள். எனவே அவருக்கான கதவை மூடாதீர்கள். இருவரையுமே ஜோடியாக விளையாட வையுங்கள். என்னைப் பொறுத்த வரை அந்த இருவருமே விளையாடுவதற்கு நல்ல வீரர்கள்” என்று கூறினார்.

- Advertisement -