இப்படியே போனா கம்பீருக்கும், ரோஹித்துக்கும் சண்டை வர வாய்ப்பிருக்கு.. என்ன நடக்குது இந்திய அணியில்? – விவரம் இதோ

Rohit-Gambhir
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தாலும் அடுத்ததாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (0-2) என்ற கணக்கில் இழந்து ஏமாற்றம் அளித்திருந்தது. ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் இந்த ஒருநாள் தொடர் தான் மிகவும் மோசமான தொடராக மாறியுள்ளது.

ஏனெனில் இந்த தொடருக்கு முன்னதாக இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள ரோஹித் சர்மா 34 வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருந்தார். ஆனால் இந்த இலங்கை தொடரில் மூன்று போட்டியில் இரண்டு தோல்விகளை சந்தித்து தொடரையும் அவர் இழந்துள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் 48 போட்டியில் 34 வெற்றிகள் 12 தோல்விகள் மற்றும் ஒரு டை என அவரது புள்ளி விவரங்கள் மாறியுள்ளன. இந்நிலையில் இந்து தொடரில் கேப்டனாக அவர் எடுத்த சில முடிவுகளை கௌதம் கம்பீர் மாற்றியமைத்ததால் தான் இந்த தோல்வி ஏற்பட்டதாக சில தகவல்கள் உலா வருகின்றன.

ஏனெனில் ரோகித் சர்மா எப்போதுமே நிலையான ஒரு அணியுடன் களமிறங்க நினைப்பவர் ஆனால் புதிய பயிற்சியாளரான கம்பீர் மிடில் ஆர்டரில் வலது கை – இடது கை வீரர்கள் விளையாட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு போட்டியிலுமே ஒவ்வொரு வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்கினார்.

- Advertisement -

அதேபோன்று முழு நேர பந்துவீச்சாளர்களை நம்பாமல் பகுதிநேர பந்துவீச்சாளர்களும் பந்து வீசவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அதனால் பேட்டிங்கில் சொதப்பொலும், பந்து வீச்சில் சொதப்பலும் தென்பட்டன. இப்படி ஒவ்வொரு போட்டியிலுமே சோதனை செய்கிறேன் என்று சில முடிவுகளை கம்பீர் தன்னிச்சையாக எடுப்பதாலே இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தற்போது ரோகித் சர்மா கம்பீருடன் சற்று மறைமுகமான அதிருப்தியில் உள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கா தெரியாது? இலங்கை அணி வேணும்னே அதை செஞ்சாங்க.. நாமும் மாறல.. ஆகாஷ் சோப்ரா

மேலும் கடந்த பல ஆண்டுகளாகவே டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி பயிற்சி அளித்து வந்த கம்பீர் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு செட்டாவாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவின் அணுகுமுறையை கம்பீர் சீர்குலைக்கும் பட்சத்தில் நிச்சயம் ரோகித்துக்கும் கம்பீருக்கும் விரிசில் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement