சாம்பியன்ஸ் ட்ராபியில் 9 விக்கெட்ஸ் எடுத்தும்.. ஷமியை தேர்வுக்குழு கழற்றி விட இதான் காரணம்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ஷமி 3 விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்த அவர் எதிரணிகளை தெறிக்க விட்டு இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனால் அத்தொடரில் சந்தித்த காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் மீண்டும் களமிறங்குவதற்கு ஒரு வருடமானது.

கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஒரு வழியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டார். அந்தத் தொடரில் 9 விக்கெட்டுகள் எடுத்த ஷமி இந்தியா கோப்பையை வெல்வதற்கு தம்முடைய பங்காற்றினார். இருப்பினும் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு அவரை கழற்றி விட்டது.

- Advertisement -

பழைய ஷமி மிஸ்:

அடுத்து நடைபெறும் ஆசியக் கோப்பையிலும் அவருக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்த ஷமி “பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் ஓய்வு பெறுகிறேன்” என்று சமீபத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் 2023 உலகக் கோப்பைக்குப்பின் முகமது ஷமி பழைய வேகத்தில் மிரட்டலாக பவுலிங் செய்ய முடியாமல் தடுமாறுவதே கழற்றி விடப்பட்டதற்கு காரணம் என்று முன்னாள் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என் மேலே எனக்கு என்ன பிரச்சனை? சிலர் என்னுடைய ஓய்வை விரும்புகிறார்கள் என்று முகமது ஷமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஓய்வு பெற விரும்பாத ஷமி தொடர்ந்து விளையாட விரும்புகிறார். இப்போதும் ஃபிட்டாக இருக்கும் தாம் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பதாக ஷமி கூறுகிறார்”

- Advertisement -

காரணம் என்ன:

“இருப்பினும் தேர்வுக் குழுவினரைப் பொறுத்த வரை சாம்பியன்ஸ் ட்ராபியில் ஷமி 5 விக்கெட் ஹால் எடுத்தார். ஆனால் அவருடைய பந்துகளை பார்த்த போது 100% பழைய ஷமி போல உங்களால் உணர முடியவில்லை. ஷமியின் முழுமையான வேகத்தைக் கடந்த ஐபிஎல் தொடரிலும் பார்க்க முடியவில்லை. அவர் சாம்பியன்ஸ் டிராபியில் அதே பழைய வேகத்தில் பவுலிங் செய்யவில்லை”

இதையும் படிங்க: தெ.ஆ, ஆஸியில் இதை செஞ்சா.. விராட், ரோஹித் 2027 உ.கோ வாய்ப்பை யாராலும் தடுக்க முடியாது.. குப்தா பேட்டி

“ஷமியை போன்ற பவுலர் ஒரே ஓவரில் 5 ஒய்ட் பந்துகளை வீசி நான் பார்த்ததே இல்லை. ஆனால் அதையும் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் செய்து பார்த்தோம். ஷமியை போன்றவர் அதிக விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் ஃபார்ம், ரிதம், முழு வேகத்தில் பந்து ஒரே மாதிரியாக செல்கிறதா என்பதே முக்கியம். அந்த அம்சங்கள் இருந்தால் அவரை கேப்டன் மற்றும் தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அந்த அம்சங்களில் தற்போதைய ஷமி மேல் தேர்வுக்குழுவுக்கு நம்பிக்கை இல்லை என்பதே நிதர்சனமாகும்” என்று கூறினார்.

Advertisement