அவுட்ன்னு கோலிக்கே தெரியும்.. இலங்கையில் இந்திய பேட்ஸ்மேன்கள் திண்டாட இதான் காரணம்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 5
- Advertisement -

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் வெறும் 241 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 64 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்ததை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர்.

அதனால் 208 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி வெற்றி பெற்ற இலங்கை டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக அப்போட்டியில் அகிலா தனஞ்செயா வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். இருப்பினும் அது திடீரென சுழன்று விராட் கோலியின் கால்களில் அடித்தது.

- Advertisement -

கோலிக்கு தெரியும்:
அதனால் இலங்கை அணியினர் கேட்டதை தொடர்ந்து நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் அதை எதிர்த்து விராட் கோலி ரிவ்யூ எடுத்த போது பந்து அவருடைய பேட்டில் உரசுவதாக அல்ட்ரா எட்ஜ் காண்பித்தது. அதனால் அந்த தீர்ப்பை மாற்றிய 3வது நடுவர் நாட் அவுட் வழங்கியது இலங்கை அணியினரை கொந்தளிக்க வைத்தது. ஏனெனில் பந்துக்கும் விராட் கோலியின் பேட்டுக்கும் சிறிய இடைவெளி இருந்தது போல தெரிந்தது.

அதனால் இது எப்படி அவுட்டாகும்? என்று இலங்கை பயிற்சியாளர் ஜெயசூர்யா நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அது அவுட்டென விராட் கோலிக்கு தெரியும் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலங்களில் தொடர்ந்து ஃபிளாட்டான பிட்ச்சுகளில் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் இத்தொடரில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவதே தடுமாற்றத்திற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “கோலியின் அவுட் சுவாரசியமானது. பந்து அவருடைய காலில் அடித்தது. அவரும் உடனடியாக ரிவியூ எடுத்தார். ஆனால் நாம் பந்தை அடிக்கவில்லை என்பது விராட் கோலிக்கும் தெரியும். இருப்பினும் அல்ட்ரா எட்ஜ் அவுட்டில்லை என்பதை காண்பித்தது. ஆனால் அது விக்கெட் என்று இலங்கை அணியினர் நினைத்ததால் பிரச்சனை உருவானது”

இதையும் படிங்க: எல்லாத்தையும் விட இந்தியா உ.கோ ஜெயிக்க இது வேணும்.. 2024 டி20 உ.கோ வெறித்தனமாக கொண்டாடியது பற்றி டிராவிட்

“இத்தொடரில் எதிரணியின் பவுலிங் அந்தளவுக்கு தரமாக இல்லாத நிலையில் நாம் தடுமாறுவது ஏன்? ஏனெனில் நாம் இது போன்ற பிட்ச்களில் அதிகமாக விளையாடுவதில்லை. நாம் ஃபிளாட்டான பிட்ச்களில் நன்றாக விளையாடுகிறோம். அதே சமயம் ஃபிளாட்டான பிட்ச்களில் நாம் நன்றாக பந்து வீசுகிறோம். ஆனால் பந்து சுழலும் போது நாம் முழங்காலுக்கு கீழே விடுகிறோம்” என்று கூறினார்.

Advertisement