இனிமேலும் சச்சின், ரிச்சர்ட்ஸ் மாதிரி இல்ல.. அவரை ஈஸியா அவுட்டாக்குறாங்க.. ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

Aakash Chopra
- Advertisement -

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராகவும் முதல் முறையாக சொந்த மண்ணில் இந்தியா தோற்றுள்ளது. இந்த தோல்விகளுக்கு சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடாதது முக்கிய காரணமாக அமைந்தது.

குறிப்பாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி அந்த தொடரில் வெறும் 93 ரன்களை 15.50 என்ற மோசமான சராசரியில் எடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்தார். அது மட்டுமன்றி சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக ஒரு கட்டத்தில் 54.97 என்ற நிலையிலிருந்து விராட் கோலியின் சராசரி தற்போது 48.83 என சரிந்துள்ளது.

- Advertisement -

சாதாரண பேட்ஸ்மேன்:

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அல்லது ரிச்சர்ட்ஸ் போல இனிமேலும் விராட் கோலி உயர்தரமான பேட்ஸ்மேன் கிடையாது என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். எனவே ஓரளவு நன்றாக பந்து வீசினாலே விராட் கோலியை எளிதாக அவுட்டாக்க முடியும் என்றும் அவர் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“சச்சின் டெண்டுல்கர் அல்லது சர் விவ் ரிச்சர்ட்ஸ் போல விராட் கோலியும் ஒளியை கொண்டிருந்தார். இந்த வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தவுடன் அவர்கள் கட்டளையிடுவார்கள். விராட் கோலியின் ஒளியும் அது போலவே இருந்தது. ஆனால் இப்போது விராட் கோலி வரும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதாக அவுட் செய்ய முடியும் போலிருக்கிறது”

- Advertisement -

ஈஸியா அவுட்டாக்கலாம்:

“நான் அப்படி சொல்லவில்லை. விராட் கோலி பேட்டிங் செய்ய வரும் போது எதிரணியின் பாடி லாங்குவேஜில் நீங்கள் அதை காணலாம். அவரிடம் மதிப்பிடுவதில் மீண்டும் மீண்டும் தவறு ஏற்படுகிறது. சில நேரங்களில் ஃபுல்டாஸ் பந்துகளை தவற விடுகிறார். சில நேரங்களில் ஃபீல்டருக்கு நேராக அடித்து விட்டு ரன்கள் எடுக்க ஓடுகிறார்”

இதையும் படிங்க: 4 – 0ன்னு ஆஸியை வீழ்த்தி ஃபைனலுக்கு செல்ல வாய்ப்பில்லை.. இந்தியா இதை செஞ்சாலே போதும்.. கவாஸ்கர் பேட்டி

“சில நேரங்களில் எப்படி இன்சைடு அல்லது அவுட் சைடு எட்ஜ் வாங்குகிறார் என்பதே தெரியவில்லை” என்று கூறினார். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு விராட் கோலி மொத்தமாக 6 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 250 ரன்களை 22.72 சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியாவில் அவர் இந்தியாவின் வெற்றிக்கு சிறப்பாக விளையாட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement