ஆசிய கேம்ஸ் தொடரில் சுந்தர், சுதர்சன் இருந்தாலும் அந்த தமிழக வீரர் இல்லாதது ஏமாற்றமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா பேட்டி

- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்கும் நிலையில் செப்டம்பர் 28 முதல் சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அப்படி ஒரே சமயத்தில் 2 தொடர்கள் நடைபெறுவதால் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி உலக கோப்பையில் விளையாட உள்ளது. அதன் காரணமாக ருதுராஜ் தலைமையில் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் முழுவதுமாக இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

ஆரம்பத்தில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுவார் என்று செய்திகள் வெளியாகினாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள தேர்வுக்குழு நிறைய இளம் வீரர்களை இத்தொடருக்கான அணியில் தேர்வு செய்துள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெறாத நட்சத்திர இளம் வீரர் ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் இத்தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த அணியில் தமிழகத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் நேரடியாகவும் சாய் சுதர்சன் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் ஸ்டேண்ட் பை வீரர்களாகவும் தேர்வாகியுள்ளனர்.

வாய்ப்பு கிடைக்கலையே:
இந்நிலையில் இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தினேஷ் கார்த்திக் ஆதரவுடன் கொல்கத்தா அணியில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி 2020, 2021 சீசனில் அசத்திய அவர் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் ஃபார்மின்றி தவித்ததால் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் தேர்வானார்.

Varun

இருப்பினும் அதில் ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்று அசத்த தவறிய அவர் 2022 ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்டதால் மீண்டும் மறு வாய்ப்பை இழந்தார். ஆனாலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்களை எடுத்து ஃபார்முக்கு திரும்பிய அவர் 2023 டிஎன்பிஎல் தொடரிலும் 9 போட்டிகளில் 13 விக்கெட்களை 6.52 என்ற எக்கனாமியில் எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். அதனால் இந்த தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த அணியை பார்க்கும் போது அவர்கள் சிறப்பாக உருவாக்கியுள்ளதாக உங்களுக்கு தெரிகிறது. சொல்லப்போனால் சில புதுமுக வீரர்களின் பெயர்களை இது போன்ற தொடர்களுக்கான அணில் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். ஆனால் இந்த அணியிலும் ஏதோ ஒரு முக்கிய பெயர் தவறியுள்ளதாக நீங்கள் பார்க்கிறீர்களா? அந்த வகையில் இந்த அணியில் வருண் சக்கரவர்த்தி என்ற பெரிய பெயர் இல்லை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அவரை விளையாடினார்கள். ஆனால் திடீரென்று அவரை நீங்கள் நீக்கி விட்டீர்கள்”

Chopra

“இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து ஒரு சிறந்த ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக இந்த தொடரில் அவரும் ஒரு பகுதியாக இருப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். இருப்பினும் அது நடக்கவில்லை” என்று கூறினார். மேலும் ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது போன்ற தேவைக்கு அதிகமான ஸ்பின்னர்கள் தேர்வாகியுள்ளது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:ஐ.பி.எல் தொடரின் போது எனது பேட்டிங்கை பார்த்த தோனி கொடுத்த அட்வைஸ் இதுதான் – ரிங்கு சிங் வெளிப்படை

“நீங்கள் தேர்வு செய்துள்ள வாஷிங்டன் சுந்தர் தம்முடைய ஐபிஎல் அணியில் குறைவான ஓவர்கள் வீசி இன்னும் காயத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். அதே போல சபாஷ் அஹமது இந்தியாவுக்கு அவ்வப்போது விளையாடினார். அப்படி ஏற்கனவே தேர்வான வீரர்கள் மீண்டும் வாய்ப்பு பெறும் கோணத்தில் பார்க்கும் போது வருண் சக்கரவர்த்தி இந்த அணியில் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement