ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.
இந்த தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். அதன் காரணமாக ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டும், கேப்டன்சிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ரோகித் சர்மா முதல் முறையாக தம்முடைய கேரியரில் சுயநலமான முடிவை எடுத்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
சுயநலமான ரோஹித்:
மேலும் அணியின் நலனுக்காக ஐந்தாவது போட்டியில் ரோகித் தம்மை தாமே நீக்கி விட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேரியரில் முதல் முறையாக ரோஹித் தனக்கான ஒரு முடிவை எடுத்துள்ளார். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் அவரை மிடில் ஆர்டரில் இருந்து துவக்க வீரராக களம் இறக்கும் முடிவை எடுத்தார்கள்”
“அந்த முடிவை ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி எடுத்தனர். ஏனெனில் அவர்கள் ரோகித் சர்மா ஓப்பனிங்கில் அதிரடியாக விளையாட விரும்பினார்கள். ஆனால் இங்கே முதல் முறையாக ரோகித் அணியின் நலனுக்காக இல்லாமல் தனது நலனுக்காக முடிவை எடுத்துள்ளார் என்பதே உண்மையாகும். ஏனெனில் இந்த தொடரில் ராகுல் துவக்க வீரராக நன்றாக விளையாடி வருகின்றார்”
ராஜினாமா அப்றம்:
“சுப்மன் கில் 2023இல் நன்றாக விளையாடினார். அவர் தான் அந்த வருடம் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் இந்தியாவுக்காக எடுத்திருந்தார். இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியிலும் ஓரளவு நல்ல துவக்கத்தைப் பெற்ற அவரை ரோகித் தமக்காக 4வது போட்டியில் நீக்கினார். அப்படி கேரியரில் முதல் முறையாக தனது சொந்த நலனுக்காக ரோகித் எடுத்த முடிவு இந்தியா போட்டியை ட்ரா செய்யவில்லை”
இதையும் படிங்க: இன்னுமா உலகம் நம்புது.. இலங்கையில் கையில் இந்தியாவின் கனவு.. 2025 ஃபைனல் செல்ல நிகழ வேண்டியது
“அடுத்ததாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் கடைசி போட்டியில் அவர் தம்மை தாமே வெளிய உட்கார வைக்க வேண்டும். ஓப்பனிங்கில் ராகுல், 3வது இடத்தில் கில், 6வது நிதிஷ் இடத்தில் விளையாட வேண்டும். ஆனால் அதை ரோஹித் செய்வாரா? இருப்பினும் கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர் அதை எடுக்க மாட்டார். எனவே கௌதம் கம்பீர், அஜித் அகர்கர் போன்றவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்களா என்பதை பார்ப்போம்” எனக் கூறினார்.



