சிஎஸ்கே தோனி மாதிரி கிடையாது.. மும்பை ரோஹித் சர்மாவுக்கு இதை செய்யாது.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash Chopra
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையற்ற வீரர்களை கழற்றி விட உள்ளன. அது போன்ற சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை தக்க வைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏனெனில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த அவர் மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். இருப்பினும் சமீப காலங்களில் பேட்டிங்கில் தடுமாறிய அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. அந்த முடிவு மும்பை ரசிகர்களிடமே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

மும்பை அணியின் ரோஹித்:

அந்த எதிர்ப்புக்கு மத்தியில் பாண்டியா தலைமையில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. மறுபுறம் ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை தக்க வைக்காது என்றே தாம் கருதுவதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா மும்பை அணியில் இருப்பாரா அல்லது வெளியேறுவாரா என்பது பெரிய கேள்வியாகும். தனிப்பட்ட முறையில் அவர் இருக்க மாட்டார் என்று நான் கருதுகிறேன். எம்எஸ் தோனி தவிர்த்து யார் தக்க வைக்கப்பட்டாலும் அவர் அந்த அணியுடன் 3 வருடங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார். எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே கதை மிகவும் வித்தியாசமானது”

- Advertisement -

ரோஹித் வெளியேறுவார்:

“ஆனால் மும்பையில் ரோகித் சர்மா வெளியேறலாம் அல்லது மும்பை அவரை விட்டு வெளியேறலாம் என்று நினைக்கிறேன். எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் ரோஹித் சர்மா விடுவிக்கப்படுவார் என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக ஏலத்திற்கு செல்லாமல் டிரேடிங் முறையில் அவர் மற்ற அணிக்கு மாறலாம். இல்லையென்றால் அவர் ஏலத்தில் பங்கேற்பார்”

இதையும் படிங்க: எனக்கு குடுத்த வாக்குறுதியை ரிஷப் பண்ட் காப்பாற்றிவிட்டார்.. தோனியை மிஞ்சிட்டாரு – ரிக்கி பாண்டிங் புகழாரம்

“எப்படி இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் பயணம் முடிவுக்கு வந்ததாகவே நான் கருதுகிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல 37 வயதாகும் ரோஹித் சர்மா இன்னும் ஓரிரு வருடங்கள் மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 5 கோப்பையை வென்று கொடுத்ததை மறந்து கேப்டன்ஷிப் பதவியை பறித்த மும்பை நிர்வாகம் அடுத்த வருடம் அணியிலிருந்தே ரோஹித்தை வெளியேற்றினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Advertisement