ரிங்கு சிங் ஒன்னும் ரசல், பாண்டியா கிடையாது.. அவருக்கு இந்த வாய்ப்பை கொடுங்க.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash Chopra
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நவம்பர் 7ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 202-8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் சதம் அடித்து 107 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்காவை 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் 1 – 0* (4) என்ற கணக்கில் இந்தத் தொடரில் ஆரம்பத்திலேயே இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் ரிங்கு சிங் 6வது இடத்தில் பேட்டிங் செய்தார்.

- Advertisement -

ரிங்குவின் பேட்டிங்:

அந்த வாய்ப்பில் 2 பவுண்டரியை அடித்த அவர் 11 (10) ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் அவுட்டானார். இந்தியாவுக்காக அறிமுகமானது முதலே லோயர் மிடில் ஆர்டரில் விளையாடும் ரிங்கு தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் தோனிக்கு பின் அவர் இந்திய அணிக்கு சிறந்த ஃபினிஷராக கிடைத்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஆனால் லோயர் ஆர்டரில் விளையாடுவதால் ரிங்கு அதிக ரன்கள் குவிக்கும் வாய்ப்பை பெறுவதில்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாம் ரிங்குவிடம் நியாயமாக நடந்து கொள்கிறோமா? என்பது முக்கிய கேள்வி. ஏனெனில் முதன்மை வீரராக அவரை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்”

- Advertisement -

ரசல் கிடையாது:

“பேட்டிங் வரிசையில் மேலே அனுப்பிய போதும் அல்லது பவர் பிளேவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த போதும் ரிங்கு சிங் ரன்கள் குவித்துள்ளார். அங்கே அரை சதங்களை நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ள அவர் ஆபத்தில் உதவும் வீரராக உருவெடுத்துள்ளார். அப்படிப்பட்ட அவரை ஏன் நாம் 4வது போன்ற இடத்தில் களமிறக்காமல் எப்போதும் 6வது இடத்தில் விளையாட வைக்கிறோம்”

இதையும் படிங்க: சேட்டா அடுத்த 7ல நீங்க தான்னு துலீப் கோப்பைலயே சொல்லிட்டாரு.. சூரியகுமாரின் ஆதரவு பற்றி சாம்சன் பேட்டி

“டர்பனில் திலக் வர்மாவை 6வது இடத்தில் விளையாட வைத்து அவரை நீங்கள் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம். ஏனெனில் ரிங்குவால் ஃபினிஷிங் செய்ய முடியும். ஆனால் ஃபினிஷராக மட்டுமே முடியும் என்று அர்த்தமில்லை. இதுவே என்னுடைய புரிதல். அவரால் சிக்ஸர்களை அடிக்க முடிகிறது. ஆனால் அவர் ஹர்டிக் பாண்டியா, ஆண்ட்ரே ரசல் போன்ற வலுவான உடலைக் கொண்டவர் கிடையாது” என்று கூறினார்.

Advertisement