விராட் கோலி இல்லனா ஆர்சிபி இல்ல.. ஃபப், சிராஜை கழற்றி விடுங்க.. பெங்களூரு 4 ரிட்டன்சன் பற்றி ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும் அல்லது ஆர்டிஎம் பயன்படுத்தி ஏலத்தில் வாங்க முடியும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அது போன்ற சூழ்நிலையில் ஆர்சிபி அணி விராட் கோலியை முதல் வீரராக 18 கோடிக்கு தக்க வைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

கடந்த 2008 முதல் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி அதிக ரன்கள் குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அதனாலேயே பெங்களூரு அணியை ஏராளமான ரசிகர்களும் பின்பற்றுகின்றனர். எனவே விராட் கோலி இல்லாமல் மொத்த ஆர்சிபி அணியும் இல்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

18 கோடிக்கு கிங் கோலி:

அதைத் தொடர்ந்து சிராஜ் டி20 கிரிக்கெட்டில் தடுமாறுவதால் அவரை கழற்றி விட்டு பின்னர் ஏலத்தில் வாங்கலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதே போல கேப்டன் பஃப் டு பிளேஸிஸை விடுவித்து மீண்டும் வாங்கலாம் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எந்த சந்தேகமும் இல்லாமல் விராட் கோலி 18 கோடிக்கு தக்க வைக்கப்பட வேண்டிய முதல் வீரர்”

“ஏனெனில் ஆர்சிபி விராட் கோலிக்கு சமம். விராட் கோலி ஆர்சிபிக்கு சமம். அவரைத் தொடர்ந்து 14 கோடிக்கு தக்க வைக்கப்பட வேண்டிய 2வது வீரராக கேமரூன் கிரீன் இருப்பார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மிகவும் வலுவான வீரரான அவர் தம்மிடம் உள்ள திறமைக்கு களத்தில் நன்றாக ஓடினால் துவக்க வீரராகவே களமிறக்கலாம். பந்து வீச்சிலும் அவர் நமக்கு ஓவர்களைக் கொடுப்பார்”

- Advertisement -

ஆர்சிபி வீரர்கள்:

“அவரால் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ரஜத் படிடார் 3வது தேர்வாக இருப்பார். கிளன் மேக்ஸ்வெல் மற்றும் பஃப் டு பிளேஸிஸ் ஆகியோர் பற்றி நான் சிந்திக்கவில்லை. 4வதாக 18 கோடிக்கு தக்க வைக்க நான் சிராஜு பற்றியும் சிந்திக்கவில்லை. அவரையும் ஆகாஷ் தீப்பையும் விடுவிக்கலாம் மற்றவர்களையும் கூட விடுவிக்கலாம்”

இதையும் படிங்க: விராட் கோலி கிடையாது.. அந்த இந்திய வீரர் தான் அதிகமா ஸ்லெட்ஜிங் டார்ச்சர் பண்ணுவாரு.. ஆஸி வீரர்கள் தேர்வு

“அதே போல அன்கேப்ட் வீரராக 4 கோடிக்கு ஆர்சிபி அணியில் தக்க வைக்க ஒருவர் மட்டுமே உள்ளார். அந்த இடத்தில் யாஷ் தயாளை தேர்ந்தெடுக்கலாம்” என்று கூறினார். முன்னதாக இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத ஆர்சிபி அணி விராட் கோலி மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை கழற்றி விட வேண்டும் என்று மற்றொரு முன்னாள் வீரர் ஆர்பி சிங் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement