இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட்டு வருகிறது. 3 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. அப்போட்டியில் இந்தியாவின் நம்பிக்கையின் நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமை காரணமாக விளையாடுவாரா என்பது சந்தேகமாக இருந்து வருகிறது.
உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலிக்கும் பும்ரா வித்தியாசமான ஆக்சனைக் கொண்டிருப்பதால் அவ்வப்போது காயமடைகிறார். அதனால் காயத்தைத் தவிர்ப்பதற்காக இங்கிலாந்தில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கௌதம் கம்பீர் ஆரம்பத்திலேயே அறிவித்தார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவின் பணிச்சுமை பற்றி பேசும் யாருமே சிராஜ் பற்றி நினைப்பதில்லை என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
2 வருடத்தில் 800 ஓவர்கள்:
உண்மையில் கடந்த 2 வருடங்களில் கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோருக்குப் பின் சிராஜ் அதிகப் பந்துகளை வீசியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “கடந்த சில வருடங்களாக சிராஜ் பணிச்சுமையை பார்த்தால், அதை நீங்களே உட்கார்ந்து ரசிப்பீர்கள். உலகம் முழுவதிலும் அதிக ஓவர்கள் வீசிய வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் சிராஜ் 3வது இடத்தில் இருக்கிறார்”
“பட் கமின்ஸ் (871.3 ஓவர்கள்), மிட்சேல் ஸ்டார்க் (856.2 ஓவர்கள்), சிராஜ் (792.5 ஓவர்கள்) ஆகியோர் டாப் 3 இடங்களில் இருக்கிறார்கள். இந்திய அணியைப் பொறுத்த வரை சிராஜை தவிர்த்து யாரும் அதிகமாக வீசவில்லை. ஒட்டுமொத்தமாக இந்திய அணியில் 990 ஓவர்களை வீசிய ஜடேஜா முதலிடத்தில் இருக்கிறார். சுமார் 1000 ஓவர்கள் வீசிய அவருக்கு அடுத்ததாக கிட்டத்தட்ட 800 ஓவர்கள் வீசிய சிராஜ் 2வது இடத்தில் இருக்கிறார்”
உழைப்பாளி சிராஜ்:
“இருப்பினும் அவரைப் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை என்று துணைப் பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் நேற்று தெரிவித்தார். தன்னிடம் இருக்கும் அனைத்தையும் எதற்கும் தயங்காமல் கொடுக்கும் அவரை கொண்டிருப்பதற்கு நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் உங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் முதுகை திருப்பிக் கொள்வார்கள்”
இதையும் படிங்க: 2019 லீட்ஸ் மாதிரி.. சரித்திரம் படைக்கும் வாய்ப்பை ஜடேஜா தவற விட.. கில் சொல்லாததே காரணம்.. கிரேக் சேப்பல்
“ஆனால் சிராஜ் அப்படிப்பட்டவர் கிடையாது. இங்கே அனைவரும் பும்ரா போல நுணுக்கம் நிறைந்தவர்களாக இருக்க முடியாது. ஆனால் பும்ராவுடன் இணைந்து விளையாடும் போது உங்களுடைய நுணுக்கங்கள் கவனிக்கப்படாது. பும்ரா போன்ற ஆல் டைம் கிரேட் பவுலருடன் விளையாடினால் நீங்கள் தாழ்மையாக தெரிவீர்கள். அதனால் மக்கள் உங்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். அது சச்சின், விராட் கோலியுடன் மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடுவதைப் போன்றது” என்று கூறினார்



