ஷமி ஏன் விளையாடல? உங்க திட்டம் சரியான எதுவா இருந்தாலும் இதை சொல்லிடுங்க.. ஆகாஷ் சோப்ரா கவலை

Aakash Chopra 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இங்கிலாந்தை 132க்கு சுருட்டிய இந்தியா 12.5 ஓவரில் இலக்கை எட்டி எளிதாக வென்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக அந்தப் போட்டியில் முகமது ஷமி விளையாடுவார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் காயத்தைச் சந்தித்த அவர் ஒரு வருடம் கழித்து குணமடைந்து இத்தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார். ஆனால் முதல் போட்டியிலேயே அவர் விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

ஷமி காயமா:

அதற்கு கொல்கத்தா பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்ததால் 3 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்ததாக கேப்டன் சூரியகுமார் தெரிவித்தார். அதனாலேயே ஷமி முதல் போட்டியில் விளையாடியிருக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் போட்டியில் ஷமி விளையாடாதது அவர் 100% ஃபிட்டாக இல்லை என்பதை காண்பிப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன்பாக ஷமி முழுமையாக குணமடைந்து விட்டாரா இல்லையா என்பதை தெளிவாக சொல்ல வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “ஒரு போட்டி மட்டுமே முடிந்துள்ளது. 4 போட்டிகள் இருக்கிறது. முதல் போட்டியில் ஷமி விளையாடவில்லை. அப்படியானால் அவர் 100% ஃபிட்டாக இல்லை என்பதே ஒரே அர்த்தமாகும்”

- Advertisement -

தெளிவா சொல்லுங்க:

“அதற்காக நீங்கள் சொல்லும் எந்த சாக்கும் வேலையாகாது. பிட்ச் நன்றாக இல்லை என்பதால் நீங்கள் ஸ்பின்னர்களை விளையாட விரும்புவீர்கள். அதனால் மூன்று ஸ்பின்னர்கள் விளையாடினார்கள் என்று சொல்வீர்கள். ஆனால் அந்த காரணத்தை கொடுக்காதீர்கள். அதை விட்டுவிட்டு ஷமியை விளையாட வையுங்கள். அவரைப் பற்றி நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன்”

இதையும் படிங்க: 42 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாரை பின்னுக்கு தள்ளிய – ஹார்டிக் பாண்டியா

“இன்னும் 4 போட்டிகள் இருந்தாலும் அது வேகமாக முடிந்து விடும். அந்த நான்கு போட்டிகளுக்கு பயணம் செய்வதும் பாரத்தை ஏற்படுத்தும். எப்படி இருந்தாலும் அவர் முதல் போட்டியில் விளையாடாததால் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது தெரிகிறது. அது எனக்கு கொஞ்சம் கவலையை கொடுக்கும் விஷயமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement