42 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாரை பின்னுக்கு தள்ளிய – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

டி20 போட்டியில் சாதனை நிகழ்த்திய ஹார்டிக் பாண்டியா :

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா மிகச் சிறப்பான சாதனை ஒன்று நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 10 விக்கெடுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா நான்கு ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தாலும் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் முன்னணி வீரர்களான பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரை தாண்டி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இதுவரை டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் (97) முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து யுஸ்வேந்திர சாஹல் (96) விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்று பாண்டியா எடுத்த 2 விக்கெட்டுகள் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க : கடந்த 6 மாசமாவே இந்த சதி என் பையனை சுத்தி நடந்துட்டு தான் இருக்கு – சஞ்சு சாம்சன் தந்தை வேதனை

நேற்றைய போட்டியோடு சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அவர் பும்ரா மற்றும் புவனேஷ்குமாரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார். அவருக்கு அடுத்து நான்காவது இடத்தில் புவனேஷ்வர் குமாரும் (90), ஐந்தாவது இடத்தில் பும்ராவும் (89) உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement