காசு முக்கியம் பிகிலு.. இந்தியா இல்லாம இதை செஞ்சுத்தான் பாருங்களேன்.. பாகிஸ்தானுக்கு ஆகாஷ் சோப்ரா சவால்

Aakash Chopra
- Advertisement -

அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனையால் எதிரி நாடுகளாக தங்களை பாவித்துக் கொள்கின்றன. அது இருநாடுகளுக்கிடையேயான சர்வதேச கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு பிரச்சனைகளால் 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதையும் அந்நாட்டுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதையும் இந்தியா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அதே போல 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது.

அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது. அதே போல வரும் பிப்ரவரி மாதம் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அத்தொடரில் தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கை நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

- Advertisement -

இந்தியா இல்லாமல்:

இதற்கிடையே ஐசிசி புதிய தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா டிசம்பர் மாதம் பொறுப்பேறுகிறார். அதனால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் இந்தியா வரவில்லையெனில் அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு சாம்பியன்ஸ் ட்ராபியை நடத்துவோம் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒருவேளை இந்தியா சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கவில்லையெனில் பாகிஸ்தானுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

எனவே இந்தியா இல்லாமல் தொடரை நடத்தித் தான் பாருங்களேன் என்று மறைமுக சவால் விடுக்கும் அவர் இது பற்றி பேசியது பின்ருமாறு. “உண்மையில் பாகிஸ்தானில் நடக்கும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. கடந்த ஆசிய கோப்பையில் நாம் இலங்கையில் விளையாடினோம். அதில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை தவிர்த்து பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடியது”

- Advertisement -

பணம் முக்கியம் பிகிலு:

“பாகிஸ்தானுக்கு சமீப காலங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாடின. எனவே அவர்கள் அங்கே சென்று விளையாடலாம். இந்தியாவின் நிலைப்பாடு அரசின் கையில் உள்ளது. பிசிசிஐ கையில் எதுவுமில்லை. அது தொடர் துவங்குவதற்கு முன்பாக முடிவெடுக்கப்படும். ஆனால் இந்திய அணி விளையாடினால் தான் பொருளாதாரம் இயங்கும்”

இதையும் படிங்க: 12 வருடம்.. 80 ரன்ஸ்.. அயர்லாந்து வீராங்கனை அபாரம்.. இங்கிலாந்துக்கு எதிராக சரித்திர வெற்றி

“சிலர் இந்தியா வேண்டாம் என்று சொல்கிறார்கள். இந்தியா பங்கேற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படி பணத்தை உருவாக்குவீர்கள்? ஒரு அணியின் பார்வையில் டிக்கெட் பணம் என்பது குறைவாகவே இருக்கும் என்பதை அவர்கள் இறுதியில் புரிந்து கொள்வார்கள். ஏனெனில் உண்மையில் ஒளிபரப்பாளர்களிடமிருந்து இருந்து தான் அதிக பணம் கிடைக்கும். அது இந்தியா வந்தால் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்” என்று கூறினார்.

Advertisement