2026இல் சிஎஸ்கே ஜெய்க்க இந்த 7 பேரை கழற்றி விடனும்.. ஜடேஜாவை ட்ரேட் பண்ணுங்க.. ஆகாஷ் சோப்ரா

Aakash chopra 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்துக்கு மாறாக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அனைவரும் 3 வெற்றிகளைப் பெற்று 10 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் சிஎஸ்கே முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்காக சிஎஸ்கே நிர்வாகம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. அந்த வாய்ப்பில் ஆயுஷ் மாத்ரே, தேவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக கிடைத்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணி கம்பேக் கொடுக்க வேண்டுமெனில் அதற்கு 7 வீரர்களை கழற்றி விட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கழற்றி விட வேண்டிய லிஸ்ட்:

அதே சமயம் 16 கோடி என்ற பெரியத் தொகைக்கு விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவை ட்ரேடிங் முறையில் கழற்றி விட்டு வேறு வீரரை வாங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் 36 வயதை கடந்து விட்ட ஜடேஜா பேட்டிங் துறையில் அசத்துவது கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதே போல தமிழக வீரர் அஸ்வினையும் கழற்றி விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “உண்மையில் சிஎஸ்கே விடுவிக்க வேண்டிய வீரர்களின் பட்டியல் நீளமாக இருக்கிறது. நானாக இருந்தால் அஸ்வின், ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, டேவோன் கான்வே, விஜய் சங்கர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி ஆகியோரை விடுவிப்பேன். ரவீந்திர ஜடேஜாவை டிரேடிங் செய்யுங்கள் என்று நான் சொல்வேன்”

- Advertisement -

டீமை மாத்துங்க:

“உங்களுக்கு தேவால்ட் ப்ரேவிஸ் 4வது இடத்தில் இருக்கிறார். டேவோன் கான்வே, ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல் ஆகியோர் டாப் 3 இடத்தில் விளையாடுவதை நிறுத்த வேண்டும். அடுத்த வருடம் மினி ஏலம் இருக்கிறது. எனவே நீங்கள் ரச்சின், கான்வே ஆகியோரை விடுவித்தால் அதற்கு பதிலாக டாப் ஆர்டரில் அடித்து நொறுக்கக்கூடிய பேட்ஸ்மேன்களை வாங்குவீர்கள் என்பது தெரிந்த விஷயமாகும்”

இதையும் படிங்க: ஜேக்கப் பெத்தலுக்கு பதிலாக நியூசிலாந்து அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த ஆர்.சி.பி – வேறலெவல் சாய்ஸ் தான்

“அடித்து நொறுக்காத ஓப்பனிங் பேட்ஸ்மேனுடன் ஏன் ருதுராஜ் மற்றொரு ஓப்பனிங் வீரராக விளையாட வேண்டும்? உர்வில் படேல் 3வது இடத்தில் விளையாடலாம். அப்படிப்பட்ட நிலையில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவர் அதிரடியாக விளையாடக் கூடியவராக இருக்க வேண்டும். ப்ரேவிஸ், பதிரனா வெளிநாட்டு வீரர்களாக இடம் பெறலாம். சாம் கரண் 3, ஜடேஜா 4வது இடங்களில் விளையாடுவது எந்த அர்த்தத்தையும் கொடுக்காது” என்று கூறினார்.

Advertisement