ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்ட சில வீரர்கள் தேர்வு செய்யப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லோயர் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் பேட்டிங் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
அதற்காக ரவீந்திர ஜடேஜா, அப்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த 3 பேருமே டிஃபன்ஸ் ஸ்பின்னர்களே தவிர விக்கெட் டேக்கிங் பவுலர்கள் கிடையாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது போன்ற முடிவு தான் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
விக்கெட் டேக்கர்கள் வேணும்:
அதிலிருந்து பாடத்தைக் கற்காமல் மீண்டும் அஜித் அகர்கர் செய்துள்ள தவறு பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அனைவருமே பேட்டிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் மேலே வந்துள்ளது தெரிகிறது. ஏனெனில் 8வது இடத்தில் விளையாடுபவர் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்”
“அதனாலேயே நீங்கள் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்துள்ளீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்திருக்கலாம். ஒருவேளை ஸ்பின்னர் தேவைப்பட்டால் வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுத்திருக்கலாம். தற்போதுள்ள 3 ஸ்பின் ஆல் ரவுண்டர்களில் இருவர் இடது கை பேட்ஸ்மேன்கள்”
பழைய தவறு:
“அந்த மூவருமே ஒருநாள் கிரிக்கெட்டில் ஃடிபன்சிவ் ஆப்சன்கள். இது நம்முடைய பேட்ஸ்மேன்கள் மீது நமக்கு கொஞ்சம் நம்பிக்கை இல்லாத தன்மையை காட்டுகிறது. அதனாலேயே நீங்கள் எட்டாவது இடத்தில் பேட்ஸ்மேன் இருப்பதை விரும்புகிறீர்கள். அதன் காரணமாகவே நீங்கள் பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். அதை நாம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் பார்த்தோம்”
இதையும் படிங்க: எல்லாம் அம்மாவுக்காக.. கேமராமேன் விளையாடினாரு.. மும்பையில் ஃபேர்வெல் பெற்ற காரணம் பற்றி சச்சின்
“இந்த டெம்ப்ளேட் சரியான விஷயம் என்று நான் கருதவில்லை. ஏனெனில் முதலில் நீங்கள் உங்களுடைய பேட்ஸ்மேன்கள் மீது நம்பிக்கையை காட்ட வேண்டும். பவுலர்கள் என்பவர்கள் முதலில் விக்கெட்டுகள் எடுப்பதற்காக மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது நல்ல ஃபார்மில் இல்லை. அதனாலேயே பேட்டிங்கில் கணிசமாக ரன்கள் குவிக்கக் கூடிய பவுலர்கள் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.



